நித்தியானந்தா, ரஞ்சிதா வீடியோவை நான் எடுக்கவில்லை: லெனின் கருப்பன்

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 2, 2011, 16:27 [IST]
சென்னை: நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை நான் எடுக்கவே இல்லை. எனக்கு வந்ததை நான் வெளியிட்டேன், அவ்வளவுதான் என்று கூறியுள்ளார் இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்ட லெனின் கருப்பன்.

லெனின் கருப்பன் தன்னைக் கற்பழிக்க முயன்றதாக புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார் இத்தனை காலமாக தலைமறைவாக இருந்து வந்த நடிகை ரஞ்சிதா.

இதுகுறித்து லெனின் கருப்பன் விளக்குகையில்,

நித்தியானந்தா மீதான வழக்கு வலுவாக உள்ளது. விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டால் அவருக்கு 30 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். எனவே என்னுடன் அவரது ஆட்கள் சமாதான பேச்சு நடத்தினர். ரூ.20 கோடி வரை தருவதாக கூறினார்கள். நான் வழக்கை வாபஸ் வாங்க மறுத்ததால் ரஞ்சிதா மூல மாக என் மீது பொய் புகார் கொடுத்துள்ளனர்.

ஆபாச வீடியோ வெளியானபோது என் மீது பெங்களூர் பிடதி போலீஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 47 பேர் புகார் கொடுத்தனர். நித்தியானந்தாவின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்த என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தனர். இது தொடர்பாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அந்த வீடியோவை நானே எடுக்க வில்லை. எனக்கு கிடைத்த வீடியோ காட்சியை வெளியிட்டேன். அவ்வளவுதான் என்று தெரிவித்துள்ளார் லெனின் கருப்பன்.
Posted by:
English summary
I never videographed Nithyanantha and Ranjitha bed room scenes, says Lenin Karuppan. He has refuted all the charges levelled against him by Ranjitha. He said that, the case against Nithyanantha is strong. So he tries to collpase it through Ranjitha. Her charges are false. Moreover I never videographed Nithyanantha and Ranjitha bed room scenes. I got these videos from some source and released, thats all, he added.
User Comments
sharu 03 Jan 2011 06:16 pm
nan athai adukavalli ann camera than aduthathu
லெனின் 03 Jan 2011 11:47 am
அதை நான் எடுக்க வில்லை டைரக்டர் சங்கர் எடுத்தார்
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST