For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மரிகோவில் பிரேம்ஜியின் பங்கு சதவீதம் குறைந்தது!

By Shankar
Google Oneindia Tamil News

Azim Premji
'பாராசூட்' எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான மரிகோவில் இருந்த தனது பங்குகளை 1 சதவீதத்துக்கும் கீழ் குறைத்துக் கொண்டுள்ளார் விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி.

விப்ரோவின் துணை நிறுவனமான விப்ரோ கஸ்டமர் கேருக்கு தொழில் ரீதியான போட்டியாளர் மரிகோ. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மரிகோ நிறுவனத்தின் 1.24 சதவீத பங்குகளை வாங்கினார் அஜீம் பிரேம்ஜி. இதனால் போட்டி நிறுவனத்தை தங்களுடன் இணைத்துக் கொள்ள பிரேம்ஜி முனைகிறார் என்று கூறப்பட்டது.

அதற்கேற்ப மேலும் கொஞ்சம் பங்குகளை வாங்கி தனது பலத்தை 1.90 சதவீதமாக உயர்த்திக் கொண்டார். ஆனால் ஜூன் 2010-க்குப் பிறகு நிலைமை மாறியது. 1 சதவீதத்துக்கு மேல் பங்கு வைத்திருப்போர் பட்டியலிலிருந்து அஜீம் பிரேம்ஜி பெயர் காணாமல் போனது.

அவர் தன்னிடமிருந்த மரிகோ பங்குகளில் பெரும்பாலானவற்றை கைமாற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரம் 1 சதவீதத்துக்கு குறைவான அளவு பங்குகளை அவர் இன்னமும் வைத்துள்ளார் என்கிறார்கள்.

English summary
Azim Premji's stake in Parachute oil maker Marico has fallen below 1%. When the IT czar first picked up a 1.24% stake in Marico over two years ago, it had set the rumour mills abuzz on the possible reasons for Premji's interest in the stock of a rival company. Premji had over the quarters raised his holding in Marico to as much as 1.90% till the end of June quarter of 2010. So the sudden disappearance of his name from the list of public shareholders with over 1% holding in Marico came as a surprise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X