தேர்தல் தொடர்பான ரெய்டுகள்-தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.15 கோடி பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 13, 2011, 12:14 [IST]
 Assembly Polls Raids Praveen Kumar Aid0091
சென்னை: சட்டசபைத் தேர்தலில் பணப் புழக்கத்தைத் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் சிறப்புப் படை போலீஸார் நடத்தி வரும் சோதனைகளில் இதுவரை ரூ. 15 கோடி அளவுக்குப் பணம், தங்க நகை, சேலைகள் உள்ளிட்டவை சிக்கியுள்ளன என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தவறாக பயன்படுத்தி, போலியாக ஊழியர்களின் பெயர்களை சேர்த்து, மக்களுக்கு பண வினியோகம் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுகாவில் உள்ள அகரம் ஆலம்பாடி ஊராட்சியில், இது போன்ற முறைகேடு நடந்துள்ளது. ஊராட்சித் தலைவர் சங்கரை கைது செய்ய, மாவட்ட கலெக்டர், வாரன்ட் பிறப்பித்துள்ளார்.இது தெரிந்ததும், தலைவர் தலைமறைவாகியுள்ளார். அவரை, தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற முறைகேடுகள் வேறு எங்கும் நடக்காத அளவிற்கு கண்காணிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பத்தாயிரம் வாக்குச் சாவடிகளில், கேமரா பொருத்தப்பட உள்ளது. இது தொடர்பாக, வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், அரசியல் கட்சியினர் சில தகவல்களை பரப்பி வருவதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக புகார்கள் வந்தால், கடும் நடவடிக்கை எடுப்போம்.

வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு ஓட்டு போடுகின்றனர் என்பதை, கேமரா மூலம் கண்டுபிடித்து விட முடியும் என்று கூறி, தங்களது கட்சிக்குத் தான் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. உண்மையில், வாக்காளர் எந்தக் கட்சியின் சின்னத்தில் ஓட்டை பதிவு செய்கிறார் என்ற விவரம் மட்டும், கேமராவில் பதிவாகாது. அந்த கோணத்தில் தான், கேமராக்களை பொருத்துவோம். எனவே, வாக்காளர்கள் எந்தவித பயமும் இன்றி, தாங்கள் விரும்பிய வேட்பாளர்களுக்கு ஓட்டு போடலாம்.

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து, இதுவரை 15 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 11ம் தேதியன்று, மதுரை மாவட்டத்தில் நான்கு கார்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு காரில் 89 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், மற்றொரு காரில் 1 கோடியே 6 லட்சம் ரூபாய், மூன்றாவது காரில் 55 லட்சம் ரூபாய், நான்காவது காரில் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர்.அப்படியிருந்தாலும், ஆவணங்கள் இருக்க வேண்டும். மேலும், வங்கிப் பணம் என்றால், வாகனத்துடன் பாதுகாவலர்கள் செல்வர். அதுபோல், ஆவணங்களோ, பாதுகாவலர்களோ இல்லை. ஈரோட்டில், ஒரு காரில் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மத்திய அமைச்சர் அழகிரி மீதான புகார் குறித்து, தேர்தல் கமிஷனுக்கு அவர் பதில் அனுப்பியுள்ளார். அதைப் பற்றிய விவரம் எங்களுக்குத் தெரியாது. மற்றவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில், தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலில் வாக்காளர்களை கவனிக்க, பல்வேறு யுக்திகளை அரசியல் கட்சிகள் கையாண்டு வருகின்றன. பல இடங்களில், பல்வேறு பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து வரும் நிலையில், திருக்கோவிலூரில் நேற்று முன்தினம் ஒரு காரில் 24 லட்சம் ரூபாயையும், ஒரு வாகனத்தில் மூன்று லட்சம் எண்ணிக்கையிலான பீடி பண்டல்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பீடி குடிப்பவர்களை குஷிப்படுத்த, பீடிகள் எடுத்துச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது என்றார்.

Posted by:
English summary
Spl Police squads have seized Rs. 15 crore worth cash, jewells and sarees from raids. EC has ordered to hold such raids to curb money power in the polls.
User Comments
ndhana 1 month, 1 week
சத்தியமா ஜெயலலிதா வந்து மக்களுக்கு என்னத்தே கிழிக்க போரான்குனு தெரியலே.இப்படி ஒரு கூட்டணி மக்களுக்கு தேவைதானா?இந்தம்மா முதலமைச்சர் ஆனா மக்கள் கதி கொஞ்சம் நினைத்துபாருங்கள்.இவ யாரையுமே மதிக்கமாட்டா,இவ ஜெயச்சா மக்கள் கதி ,கொஞ்சம் யோசித்து பாருங்கள் ,நீங்கள் ஓட்டு போடுவதற்கு முன் ,சிந்தியுங்கள் மக்களே,ஓட்டு போடுவதற்கு மக்கள் வேண்டும் ,பின்பு இவள் ஆட்டம் தாங்கமுடியாது தமிழகமே.தயவு செய்து இவளுக்கு ஓட்டு போடவேண்டாம்.கலைஞர் ஐய்யா எவ்வளவோ நன்மைகள் மக்களுக்கு செய்திருக்கார்.உங்கள் ஓட்டு கலைங்கருக்கு.
ndhana 1 month, 1 week
சத்தியமா இவர்கள் வந்து மக்களுக்கு என்னத்தே கிழிக்க போரான்குனு தெரியலே.இப்படி ஒரு கூட்டணி மக்களுக்கு தேவைதானா?இந்தம்மா முதலமைச்சர் ஆனா மக்கள் கதி கொஞ்சம் நினைத்துபாருங்கள்.இவ யாரையுமே மதிக்கமாட்டா,இவ ஜெயச்சா மக்கள் கதி ,கொஞ்சம் யோசித்து பாருங்கள் ,நீங்கள் ஓட்டு போடுவதற்கு முன் ,சிந்தியுங்கள் மக்களே,ஓட்டு போடுவதற்கு மக்கள் வேண்டும் ,பின்பு இவள் ஆட்டம் தாங்கமுடியாது தமிழகமே.தயவு செய்து இவளுக்கு ஓட்டு போடவேண்டாம்.கலைஞர் ஐய்யா எவ்வளவோ நன்மைகள் மக்களுக்கு செய்திருக்கார்.உங்கள் ஓட்டு கலைங்கருக்கு.
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST