தமிழக இளைஞர் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கீடு

திங்கள்கிழமை, மார்ச் 14, 2011, 9:42 [IST]
Tn Youth Congress Bags 9 Seats Aid0091
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ள 63 சீட்களில் 9 சீட்களை இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளனராம். அதில் ஈரோடு தொகுதியில் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவருமான யுவராஜா போட்டியிடவுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக போராடி 63 சீட்களைப் பெற்றுள்ளது. தற்போது இதை உள் ஒதுக்கீடு செய்யும் வேலை நடந்து வருகிறது. அதாவது, ஒவ்வொரு கோஷ்டிக்கும் பங்கு பிரித்துக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ராகுல் காந்தியின் செல்லப் பிள்ளையான இளைஞர் காங்கிரஸ் பிரிவுக்கு 9 தொகுதிகளை ஒதுக்கியுள்ளனராம்.

இதன் மூலம் 30 வயது கொண்ட வேட்பாளர்களுக்கு, அதாவது கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கும் கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இளைஞர் காங்கிரஸார் பெருமையுடன் கூறுகின்றனர்.

இளைஞர் காங்கிரஸ் தலைவரான யுவராஜா ஈரோடு தொகுதியில் போட்டியிடவுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான விஜய் இளஞ்செழியன் ஆம்பூரில் நிற்பார் என்று தெரிகிறது. இவர் கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த முன்னாள் எம்.பி. ஜெயமோகனின் மகன் ஆவார். ஆக, இளைஞர் காங்கிரஸிலும் வாரிசு அரசியல் புகுந்து விட்டது.

இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவரும், கார்த்தி சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்தவருமான வரதராஜன் மதுரையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடுவாராம். அனேகமாக மதுரை கிழக்குத் தொகுதியில் அல்லது மேற்குத் தொகுதியில் இவர் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அர்த்தனாரிக்கு சேலம், பேராவூரணியில் மகேந்திரன் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

கரூர் தொகுதியில் ஜோதிமணி போட்டியிடலாம். இளைஞர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய இரு பெண் வேட்பாளர்களில் இவரும் ஒருவர். ராகுல் காந்தியின் தீவிர ஆதரவைப் பெற்றவர் இவர் என்றும் கூறப்படுகிறது. இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வளரும் பிரகாசமான தலைவர் என்ற பெயரும் இவருக்கு உள்ளது.

இன்னொரு பெண் வேட்பாளராக காயத்ரி இருப்பார். இவர் கோவையில் போட்டியிடக் கூடும். ஆற்காடு தொகுதியில் ராஜேஷ் என்பவர் போட்டியிடலாம் என்று தெரிகிறது.

இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு 9 சீட் ஒதுக்கியதைப் போல, சேவாதளம், மகளிர் காங்கிரஸுக்கு தலா 2 சீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Posted by:
English summary
Tamil Nadu youth Congress has bagged 9 seats, sources say. Its president Yuvaraja may contest in Erode. Vice President Varadarajan will contest from Madurai. Sevadal and Mahilla Congress also allocated 2 seats each.
User Comments
ndhana 1 month, 1 week
இந்தம்மாவுக்கு முன்னூற்றி ஏழு சாதிக்கட்சிகள் ,சாதி அமைப்புகள்,அதற்கும் மேலேயும் ஆதரவு தெரிவித்தாலும், வந்தாலும் கவலை இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை கலைஞர் எவ்வளவோ நன்மைகள் ஏழை பாலைகல்லுக்கு செய்திருக்கார்.அதுவே அவர் வெற்றிக்கு வளவகுக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட ஜாதி அமைப்புகள், கட்சிகள் உள்பட 307 அமைப்பு கள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது ஜெயலலிதாவே கலைஞரின் மேல் வெறுப்பினால் அவரே இப்படி ஒரு செய்தியை மக்களிடம் வேண்டுமென்றே கூறி வருகிறார்.
Narren001 1 month, 1 week
அனைத்து மத பண்டிகைகளுக்கும் மக்களுக்கு வாழ்த்து சொல்லுவது எல்லா மாநில முதல்வர்களின் வழக்கம்.. ஆனால் போலி மதசார்பற்ற நமது முதல்வர் ( என்னை பொறுத்தவரை எந்த மதத்தின் மீதும் தங்கள் காழ்ப்புணர்ச்சியை காண்பித்தாலும் அவர் ஒரு மதவெறியர்.).. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவார் ஆனால் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டார்.. இவர் ஆட்சியில் இல்லை என்றால் பரவாயில்லை.. திமுக தலைவராக அவர் வாழ்த்து சொல்ல வேண்டாம்..
Narren001 1 month, 1 week
ஒரு முதல்வராக இருந்து கொண்டு அவ்வாறு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.. ஆதலால் இந்த முறை அனைவரும் திமுக போட்டியிடும் அனைத்து தொகுதிக்களிலும் அவர்களுக்கு எதிராக வாக்களித்து திமுக-வை தோற்கடிப்போம்..
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST