இன்போசிஸ் போர்டிலிருந்து மோகன்தாஸ் பய் ராஜினாமா

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011, 10:49 [IST]
Mohandas Pai Quits Infosys Board Aid0091
பெங்களூர்: இன்போசிஸ் நிறுவன இயக்குநர்கள் குழுவிலிருந்து மோகன்தாஸ் பய் விலகியுள்ளார். அவர் மனித வளப் பிரிவின் இயக்குநர் பொறுப்பில் இதுவரை இருந்து வந்தார்.

வருகிற ஜூன் 11ம் தேதி முதல் அவரது ராஜினாமா அமலுக்கு வருகிறது. 1994ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் இணைந்தவர் பய். அவரது ராஜினாமாவுக்கான காரணம் தெரியவில்லை.

2000மாவது ஆண்டு மே மாதம் முதல் அவர் போர்டு உறுப்பினராக இருந்து வந்தார். 1994 முதல் 2006 வரை அவர் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.

பய்யின் திடீர் ராஜினாமா ஐடி தொழில்துறை வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
  Read:  In English 
மோகன்தாஸ் பய் இல்லாத இன்போசிஸை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஏப்ரல் 30ம் தேதி இன்போசிஸ் நிறுவன போர்டு கூட்டம் கூடுகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் இன்போசிஸ் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து என்.ஆர்.நாராயணமூர்த்தி ஓய்வு பெறவுள்ளதால் அடுத்த தலைவர் யார் என்பதைத் தேர்வு செய்வது குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

Posted by:
English summary
Mohandas Pai has resigned as Board Member and as Director in charge of Human Resources Department. His resignation is effective from June 11, 2011. Pai joined Infosys in 1994. Reason for his resignation not yet known.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST