குஜராத் கலவரம்-மோடி மீது உளவுத்துறை அதிகாரி பரபரப்பு புகார்

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 22, 2011, 14:42 [IST]
டெல்லி: 2002ம் ஆண்டு குஜராத் முழுவதும் 1200க்கும் அதிகமானோரை பலிவாங்கிய மதக் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடிக்கு பங்குள்ளது என மூத்த உளவுத்துறை போலீஸ் அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கலவரம் நடந்து 9 ஆண்டுகள் கழித்து மோடியின் மீது இந்தப் புகாரைக் கூறியுள்ள போலீஸ் அதிகாரியின் பெயர் சஞ்ஜீவ் பட். 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் நரேந்திர மோடி கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த கலவரம் குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு தான் அளித்த பிரமாணப் பத்திரத்தில் இதனைத் தெரிவித்துள்ளார் பட்.

அவர் மேலும், "நான் உள்பட 8 போலீஸ் அதிகாரிகள் மோடியின் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம். அப்போது மோடி, மதக் கலவரத்தில் நடுநிலைமை காப்பது அவசியம் என்றாலும், இந்த முறை நிலைமை அப்படியில்லை. இனி இப்படியொரு கலவரம் நடக்கக் கூடாது எனும் வகையில் முஸ்லீம்களுக்கு கட்டாயம் பாடம் கற்றுத் தரவேண்டும். இந்துக்கள் மிகுந்த கோபத்திலும் ஆத்திரத்திலும் உள்ளனர். அந்த ஆத்திரத்துக்கு வடிகால் அவசியம்," என்றார். நான் இதை கலவரம் குறித்து விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வு படையிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை," என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்தக் கூட்டத்தில் சஞ்ஜீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை என்று மற்றொரு போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

முதல்வர் நரேந்திர மோடியிடம் இந்தக் கலவரங்கள் குறித்து கடந்த ஆண்டு இரு தினங்கள் விசாரணை மேற்கொண்டது சிறப்பு புலனாய்வு குழு. அப்போது தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மோடி மறுத்தது நினைவிருக்கலாம்.
Posted by:
English summary
A senior police officer in Gujarat has implicated Chief Minister Narendra Modi in the communal riots in 2002. Sanjiv Bhatt was posted in the Intelligence Department when India saw its worst communal riots since the partition killed 1200 people across Gujarat. In an affidavit submitted to the Supreme Court, Mr Bhatt says that he attended a meeting on February 27, 2002 at which Mr Modi asked police officers to be "indifferent" to rioters and to the calls for help from areas under attack.
User Comments
Seeman Thamizhar 23 Apr 2011 11:12 am
மோடி ஆட்சியை குற்றம் சொல்லி காங்கிரஸ் கட்சியை புகழ்பவர்கள் எல்லாரும் துளுக்க பசங்க தான். மத்தபடி மோடிக்கு மக்கள் மத்தியில் மிகவும் நல்ல பேர் தான் இருக்கு. இன்னிக்கும குஜராத் மாநிலத்தின் படு வேகமான வளர்ச்சிக்கு இவர் மட்டும் தான் காரணம். போங்கடா டேய் பொய் அடுத்து எங்க குண்டு போடலாம்னு யோசிங்க.
Seeman Thamizhar 23 Apr 2011 11:08 am
இந்த காங்கிரஸ் ஆட்சிய விட பிஜேபி எவ்வளவோ மேல். அத்வானி மாதிரி தில் உள்ள தலைவர் தான் நம் நாட்டுக்கு வேணும். மன்மோகன் சிங்க் ஒரு போட்ட நாய். அந்த முதுகெலும்பில்லாத கோழை பிரதமரை சோனியா கூட சேர்ந்து இத்தாலிக்கு pack பண்ணி அனுப்பனும். கொலகாரப்பாவிக. இன்னும் எத்தன பெற டா bomb போட்டு கொல்லப்போறீங்க.
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST