கள்ளக்காதலை நேரில் பார்த்த கல்லூரி மாணவி எரித்துக் கொலை: தாய்- போலீஸ்காரர் கைது

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 22, 2011, 11:10 [IST]
கடையநல்லூர்: தாயின் கள்ளக் காதலை கண்டித்த கல்லூரி மாணவியை தாயாரும், அவரது கள்ளக் காதலனும் சேர்ந்து எரித்துக் கொலை செய்துள்ளனர்.

கடையநல்லூரை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன் இவரது மனைவி செண்பகவல்லி இவர்களது மகள் பத்மினி (18).என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார் கடந்த மாதம் 23ம் தேதி பத்மினி மர்மமான முறையில் உடல் கருகி இறந்தார்.

இது தொடர்பாக அவரது தாயார் செண்பகவல்லியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது கள்ளக்காதலனான கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்த சுந்தரையா என்பவருடன் சேர்ந்து பத்மினியை தீவைத்து எரித்துக் கொன்றது தெரியவந்தது.

சுந்தரையா செண்பகவல்லியின் உறவினரும் ஆவார். செண்பகவல்லியின் கணவர் இல்லாத சமயத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை பத்மினி நேரில் பார்த்து பலமுறை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கடந்த மாதம் 23ம் தேதி பத்மினியின் கழுத்தை துண்டால் இறுக்கி கொன்று பின்னர் அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர்.

போலீசாரிடம் பத்மினி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடினர். போலீசார் விசாரணையில் இருவரும் சிக்கிக் கொண்டனர்.

சுந்தரையா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Posted by:
English summary
Mother and her lover were arrested for murdering daughter for opposing their illicit relationship in Kadayanallur town
User Comments
ravi 07 Sep 2011 12:45 pm
இவர்களை தூக்கில் போடணும்
ravi 07 Sep 2011 12:45 pm
இவர்களை தூக்கில் போடணும்
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST