இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக புதிய ஆதாரங்கள்: சேனல் 4 செய்தியால் பரபரப்பு

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 22, 2011, 14:14 [IST]
Sri Lankan Warcrimes Evidence Channel 4 Aid0128
கொழும்பு: இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக மேலும் சில புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சேனல் 4 செய்தி வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இறுதிப் போரி்ன்போது போர்ப் பகுதியில் இருந்த 1 லட்சம் மக்களுக்கு கணக்கே காட்டவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை அதிகாரபூர்வமாக ஐநா செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்படவுள்ள இந்த வேளையில், வெளியுலகத் தொடர்பின்றி மறைக்கப்பட்டுள்ள இலங்கையின் வடபகுதியில் பொதுமக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை, அடக்கி வைக்கப்பட்டுள்ள முகாம்கள், அந்த மக்கள் மீதான பல்வேறு துஸ்பிரயோகங்கள் என்பவற்றை வெளிப்படுத்துகின்ற ஆதாரங்கள் சேனல் 4 தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிக்கை மாற்றமின்றி வெளியிடப்படும்: ஐ.நா:

இந் நிலையி்ல் இறுதிப் போரின்போது இலங்கை அரசு செய்துள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே வெளியிடப்படும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செய்தியாளர்களிடம் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பு இயக்குநர் கூறியதாவது,

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையில் அந்நாட்டு அரசின் கருத்தை சேர்ப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இலங்கை அரசோ அறிக்கை வெளி வராமல் தடுப்பதிலேயே குறியாக உள்ளது. சீனா மற்றும் ரஷ்யாவின் உதவியால் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இலங்கை அரசு என்னதான் முயன்றாலும் ஐ.நா. நிச்சயம் அறிக்கையை வெளியிடும் என்றார்.

ஐ.நா.வுக்கு இலங்கை மிரட்டல்:

இதற்கிடையே இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை ஐ.நா. வெளியிடும் பச்சத்தில் அது ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயல்பாடுகளைத் தான் பாதிக்கும் என்று இலங்கை அரசு எச்சரித்துள்ளது.

இது குறித்து இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பெரிஸ் கூறியதாவது,

போர்க்குற்ற அறிக்கையை வெளியிட்டால் அது ஐ.நா.வின் செயல்பாடுகளைத் தான் பெரிதும் பாதிக்கும். அறிக்கையை வெளியிடுவது என்பது தவறானது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை ஆராய நடவடிக்கை எடுப்பதும் தவறானது.

அந்த அறிக்கை ஐ.நா. செயலாளருக்கு அறிவுரை வழங்கத் தான் கொடுக்கப்பட்டது. அதை ஏன் மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்றார்.

இந்த அறிக்கைக்கு உங்களின் பதில் என்ன என்று கேட்டதற்கு, 7 மாத காலமாக தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு சில நாட்களில் பதில் சொல்லிவிட முடியாது. இதற்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சகத்தின் செயலர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர் என்றார்.
Posted by:
English summary
Channel 4 has told that it has got more evidence about Sri Lankan government's war crimes. UN is determined to release the report on warcrimes unmindful of Sri Lanka's threats. Sri Lanka's external affairs minister Peiris has warned UN about the report and told that there is no need to release the report as it is a piece for advice for UN secretary general.
User Comments
Ram S 15 Jun 2011 11:17 am
Dai அரிச்சந்திரன் badu manachieudu command எழுதுடா badu
Devon Snyder 23 Apr 2011 09:57 am
ஆண்டவனே நினைத்தாலும் ராஜபாசெவை ஒன்னும் செய்ய முடியாது!! என்னா அவன் ஜாதகம் அப்படி!!!
ade 15 Mar 2012 09:45 pm
சோனியா சப்போர்ட் தான்
Arichsanthiran M 22 Apr 2011 08:34 pm
ஐயகோ...இன்னைக்கு மீண்டும் பங்கு வர்த்தகம் போல கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலக்ட்சமாக கூடிவிட்டதா? சரி பரவா இல்லை. இன்னைக்கி கொஞ்சம் கூடவே அனுதாபப்பட்டுக் கொள்கிறோம். இந்த ஈழக் கனவான்களிடம் இருந்து புரியாத விடயம்...இலங்கை இராணுவத்தை எலிகள் வென்றபோதெல்லாம் சொந்தபலத்தினால் எலி பிரபாவின் பராக்கிரமத்தினால் வென்றதாகவும், தோத்த போதெல்லாம் இந்தியாவும், தமிழக முதல்வரும் துரோகம் செய்துவிட்டதாகவும் புலம்புகிறார்களே ஏன்?
Aiyokolrangale Dhakshinamurthy 22 Apr 2011 05:20 pm
நான் தேர்தலில் வாக்கு வாங்க என்னவெல்லாம் பொய் சொல்லுவேனோ, எப்படியெல்லாம் பினாதுவேனோ, அதே மாதிரி என் உடன் பிறப்பு அப்துல் அஜீஸ் தன்னுடைய வலை பூ வாசகர்கள் எண்ணிக்கை கூடுவதற்காக சொல்லும் பினாத்தல். பொய் சொல்லி இப்படி பிச்சை எடுப்பது எங்கள் கழக உரிமை. சிறுபான்மை என்ற போர்வையில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கிற ஒரு வீர உணர்வு எங்கள் பாசறைக்கு மட்டுமே சொந்தம். அவரும் நானும் ஒருநாள் கம்பி எண்ணுவோம். ஐயோ கொல்றன்களே!
Abdul Aziz 22 Apr 2011 03:10 pm
கொலைக்கார பாவிகளா.நிங்க நல்லா இருப்பிங்க்களா.எக்சிட் தேர்தல் ரிசல்ட். ..பகவான் சாயிபாபாவுக்கு நோய் வரலாமா..? கொலை செய்தாரா சைலேந்திரபாபு, கொலை செய்தபின் கள்ள உறவு, அண்ணா, கலைஞர் நிஜ வாழ்க்கை, நான் ஏன் நக்ஸலைட்டாக மாற்க்கூடாது.? குடும்பத்தை சீர்குழைத்த ப்ரவுசிங்..AZIFAIR-SIRKALI.பிலாக்ஸ்பாட்..
horlicks thirudan 22 Apr 2011 04:19 pm
அடேய் கொரங்கு, இன்னாச்சி உனக்கு? ஒசாமா உன் மண்டையிலே குண்டு வச்சி தச்சிபுட்டானா?
thilak subramaniam 22 Apr 2011 02:46 pm
கூட்டு குடும்பமா இலங்கைய நசப்படுதிக்கிட்டு இருக்கிற உங்களுக்கு நீதி ன்னு ஒன்னு இருகிறதா மறந்திரதிங்க
Aiyokolrangale Dhakshinamurthy 22 Apr 2011 02:23 pm
எத்தனை அயோக்ய தனம் செய்தாலும், என்ன மாதிரியே கன் பார்டியா நிக்குரனே இந்த ஆளு! எதுக்கும் இந்த ஆளு கூட ஒரு டீல் போட்டுக்கலாம். கம்பி எண்ணும் போது எப்படி வாழறதுன்னு இவனுக்கும் ஒரு ப்ளான் இருக்கும். இவனும் நம்ம மாதிரி மொத்த குடும்பத்தையும் விட்டு நாட்ட கெடுத்த நாதாரிதானே! ஒரு விதத்தில நாங்க ரெண்டு பெரும் ஒண்ணுதான்! - ஐயோ கொல்றாங்களே தக்ஷிணா முர்த்தி
horlicks thirudan 22 Apr 2011 04:21 pm
இந்த கொடுமைக்கு கரிநாய்குடும்பமும் ஒரு காரணம். ஆகமொத்தம் தெலுகு கரிநாய் காசுக்கு தமிழனை வித்துபுட்டான்.
Aiyokolrangale Dhakshinamurthy 22 Apr 2011 05:26 pm
ஹோர்லிக்ஸ் திருடன் என்ற பெயரில் என் மகனை இழிவு படுத்தும் ஆர்ய இன அறிய சிறுவன் என நினைக்கிறன். முழுதாக இந்த நாட்டையே திருடும் கணியம்மா அளவுக்கு அண்ணனுக்கு அனுபவமும் பக்குவமும் இல்லை. அண்ணா பெரியார் வழியில் வந்த கனிமொழி அளவு, அண்ணனுக்கு பக்குவம் வ(ள)ர வேண்டும் என்பதுதான் கழக கண்மணிகளின் அவா. இளவல் ஸ்டாலின் தன் வழி தனி வழி என பல நகரங்களை வளைத்து போட்டது போல ஒரு திராவிட உணர்வு, ஹோர்லிக்ஸ் திருடன் என்று அன்புடன் அழைக்கபடுகிற அழகிரிக்கும் விரைவில் வரும் என நம்பலாம்.
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST