For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளா: புதிய எம்.எல்.ஏ.க்களில் 67 பேர் மீது கிரிமினல் வழக்கு, 35 பேர் கோடீஸ்வரர்கள்

By Siva
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் 67 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மீது மட்டும் 5 வழக்குகள் உள்ளன.

சமீபத்தில் 5 மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல் குறித்து கேரளாவைச் சேர்ந்த எலக்ஷன் வாட்ச் என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. தமி்ழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 31 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தான் அதிகம். புதுச்சேரி கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணி்க்கை குறைவு. ஐந்து மாநிலங்களிலும் 33 சதவீத எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள்.

கேரளாவில் 67 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கூட்டணியில் 40 பேர், மீதமுள்ள 27 எம்.எல்.ஏ.க்கள் இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்தவர்கள். 12 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. காங்கிரஸ்எம்.எல்.ஏ.க்கள் அன்வர் சாதத், ஹைபி ஈடன் ஆகியோர் மீது அதிகபட்சமாக 15 வழக்குகள் உள்ளன. முஸ்லீம் லிக் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான முனீர் மீது 14 வழக்குகள் உள்ளன.

மார்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜெயராமன் மீது 10-ம், காங்கையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மீது 7 வழக்குகளும் உள்ளன. முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மீது 5 வழக்குகள் உள்ளன.

முதல்வராக பதவியேற்ற உம்மன் சாண்டி மீது ஒரேயொரு வழக்கு மட்டுமே உள்ளது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் 35 பேர் கோடீஸ்வரர்கள். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
67 newly elected MLAs to the Kerala assembly have connection with criminal cases. Current CM Oommen chandy has connection with 1 criminal case while former CM Achuthananthan has 5 cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X