For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனிமொழியின் பாதுகாவலர் தாக்கியதில் ஏசியன் ஏஜ் போட்டோகிராபர் பல் உடைந்தது

Google Oneindia Tamil News

டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, டெல்லி சிபிஐ கோர்ட்டுக்கு வந்தபோது அவரைப் புகைப்படம் எடுக்க முயன்ற ஏசியன் ஏஜ் பத்திரிக்கையின் புகைப்படக்காரர் பிரீதம் பானர்ஜியை கனிமொழியின் பாதுகாவலர் தாக்கியதில் அவரது பல் உடைந்து ரத்தம் கொட்டியது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆஜராவதற்காக இன்று காலை டெல்லி சிபிஐ கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. அப்போது அவரது கார் விதிமுறைகளை மீறி கோர்ட் சேம்பர்கள் இருக்கும் இடத்திற்கு வெகு அருகே வந்தது.

இதைப் பார்த்த ஏசியன் ஏஜ் புகைப்படக்காரர் பிரீதம் பானர்ஜி என்பவர் காரையும், அதிலிருந்து இறங்கிய கனிமொழியையும் புகைப்படம் எடுக்க முயன்றார்.

இதைப் பார்த்த கனிமொழியின் பாதுகாவலர்களில் ஒருவர் ஓடி வந்து வேகமாக பானர்ஜியை அடித்து விரட்டினார். இதில் பானர்ஜியின் முகத்தில் அடிபட்டது. அவரது பல் உடைந்து விழுந்து ரத்தம் கொட்டியது.

இதையடுத்து பானர்ஜியை அருகில் இருந்த சக பத்திரிக்கையாளர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் தரப்பட்டுள்ளது.

English summary
Asian Age photographer Preetam Banerjee was injured when Kanimozhi's bodyguard attacked him in the CBI court campus in Delhi this morning. The photographer tried to take a snap of Kanimozhi when she arrived to the court. But the security person stopped Preetam and attacked on his face. Injured Preetam later taken to the hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X