For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்சி மாற்றம் எதிரொலி: மதுரை, திருவாரூரில் ஒரே இரவில் பலர் கைது, 531 வழக்குகள் பதிவு

By Siva
Google Oneindia Tamil News

மதுரை: மத்திய அமைச்சர் அழகிரியின் கோட்டையான மதுரையிலும், கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரிலும் போலீசார் அதிரடியாக பல குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கை சீராக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அவர் அறிவித்தவாறே பல இடங்களில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் கோட்டையான மதுரையில் பழைய குற்றவாளிகள், தேடப்படும் குற்றவாளிகள், வாரண்டு காலாவதியான குற்றவாளிகள், ரவுடிகள், புரோக்கர்கள் என பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி போட்டியிட்ட திருவாரூரிலும் பழைய குற்றவாளிகள், தேடப்படும் குற்றவாளிகள், வாரண்டு காலாவதியான குற்றவாளிகள், ரவுடிகள், புரோக்கர்கள் என நேற்று இரவு மட்டும் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

English summary
CM Jayalalitha has promised to take of law and order as the first issue. Accordingly, police have arrested scores of accused, rowdies, brokers and so on in central minister MK Azhagiri's fort Madurai and Karunanidhi's constituency Tiruvarur last night. They have registered 531 cases in one night regarding driving without licence and documents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X