For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்டிய கல்விக்கட்டணத்திற்கேற்ப மாணவர்களைப் பிரித்து பாடம் நடத்தும் பள்ளி

Google Oneindia Tamil News

சென்னை: ரவிராஜ பாண்டியன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தும் மாணவர்களை அலட்சியமாகவும், தாங்கள் சொல்லும் கட்டணத்தைக் கட்டும் மாணவர்களை ஸ்பெஷலாகவும் பாவித்து சென்னையில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் பாடம் நடத்தி வருவதாக பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர்.

சென்னையில் உள்ள சாரங்கபாணி பள்ளிக்கூடத்தில்தான் இந்தக் கூத்து நடந்து வருகிறதாம்.

இதுகுறித்து பெற்றோர்களும், புரட்சிகர மாணவர் அமைப்பினரும் கூறுகையில், இந்தப் பள்ளியில் ரவிராஜ பாண்டியன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தையும் வசூலிக்கிறார்கள். இவர்களாக நிர்ணயித்துள்ள கட்டணத்தையும் வசூலிக்கின்றனர்.

ரவிராஜ பாண்டியன் நிர்ணயத்த கட்டணத்தை கட்டும் மாணவர்களுக்கு சரிவர பாடம் நடத்துவதில்லை. அவர்களுக்கு தனியாக வகுப்புகளை ஒதுக்கி ஓரம் கட்டி வைத்துள்ளனர். இவர்களுக்கு கடனுக்குப் பாடம் நடத்துகின்றனர்.

அதேசமயம், பள்ளி நிர்வாகம் கூறும் கட்டணத்தைக் கட்டும் மாணவர்களுக்கு தனியாக பாடம் நடத்துகிறார்கள். இவர்களுக்கு சரிவர பாடம் நடத்துகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தின் இந்த பாரபட்சப் போக்குக்கு பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் குதித்துள்ளனர்.

எழும்பூர் பள்ளியிலும் போராட்டம்

இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் பள்ளி நிர்வாகங்களைக் கண்டித்து பெற்றோர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

சென்னை எழும்பூர் கில் ஆதர்ஷ் பள்ளியில் கூடுதலாக ரூ. 6000 வரை வசூலிப்பதாகவும், கட்டாயமாக ரூ. 1000 கொடுத்து ஷூக்கள் வாங்க வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் பெற்றோர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

இதேபோல ஈரோடு அம்மன் நர்சரி பள்ளி, சென்னை அண்ணா நகர் ஜெசி மோசஸ் பள்ளி ஆகியவற்றிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் குறை கூறியுள்ளனர்.

English summary
Chennai Sarangapani school conducts classes for the students according to their fees. Parents are agitating against this biased attitude.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X