For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

23 தமிழக மீனவர்கள் கைது எதிரொலி-இலங்கை தூதரகத்திற்குப் பாதுகாப்பு அதிகரிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை சிங்கள காடையர்கள் பிடித்துச் சென்றுள்ளதால் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலையைத் தொடர்ந்து சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை சிங்கள கடற்படையினர் பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர். இதனால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், எழும்பூரில் உள்ள சிங்கள புத்த மத மையம், இலங்கை வங்கி, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவன அலுவலகம் உள்ளிட்டவற்றுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒருமுறை எழும்பூரில் உள்ள சிங்கள புத்த மையத்தி்ற்குள் அதிரடித் தாக்குதல் நடந்துள்ளது. ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு கூடுதல் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

English summary
Security has been beefed up to Lankan consulate office in Chennai. Lankan navy men have arrested 23 fishermen from Rameswaram, they have been lodged in Mannar prison. So the fieshermen have launched indefinite strike in Rameswaram, it is noted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X