For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தயாநிதி-ஏர்செல் விவகாரம்: ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியிடம் சிபிஐ விசாரணை!

By Chakra
Google Oneindia Tamil News

Standard Chartered Bank
டெல்லி: 2006ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தன்னை மிரட்டியதாக ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் கூறியுள்ள புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

கிட்டத்தட்ட ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திடம் வலுக்கட்டாயமாக விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் சிவசங்கரன்.

ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திடம் விற்க இடைத்தரகராக செயல்பட்டது ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியாகும். இதையடுத்து இந்த வழக்கில் அடுத்தகட்டத்தை அடைந்துள்ள சிபிஐ, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி அதிகாரிகளிடம் இன்று தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.

வங்கியின் கார்போரெட் பிரிவு அதிகாரிகளை டெல்லி சிபிஐ தலைமையகத்துக்கு வரவழைத்து இந்த டீல் தொடர்பான ஆவணங்களைக் கோரினர் சிபிஐ அதிகாரிகள்.

மேலும் ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பது தொடர்பாக வங்கிக்கும் இந்த நிறுவனங்களுக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றம் தொடர்பான முழு ஆவணங்களையும் சிபிஐ கோரியுள்ளது.

English summary
CBI today sought clarifications from Standard Chartered Bank officials in connection with its probe into former Aircel chief C Sivasankaran's allegations that the then Telecom Minister Dayanidhi Maran forced him to sell his company to Malaysia-based Maxis group in 2006. Standard Chartered was the banker in the deal in which Maxis bought 74 per cent stake in Aircel. They said documents from the bank could provide crucial details about the financial transactions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X