For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசாரணைக்கு ஆஜராக கலாநிதி மாறனுக்கு கூடுதல் 'டைம்' கொடுத்தது போலீஸ்

Google Oneindia Tamil News

Kalanidhi Maran
சென்னை: பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய புகார்கள் குறித்து விசாரணை நடத்த வேணடியிருப்பதால் கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி சன் டிவி அதிபர் கலாநிதி மாறனுக்கு கே.கே.நகர் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் தேவை என்று கலாநிதி மாறன் கோர அதை போலீஸார் ஏற்று அவகாசம் தந்துள்ளனர்.

சேலத்தைச் சேர்ந்த விநியோகஸ்தர் செல்வராஜ் என்பவர் தீராத விளையாட்டுப் பிள்ளை பட விநியோகம் தொடர்பாக கொடுத்த பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தற்போது கலாநிதி மாறனையும் போலீஸார் விசாரிக்கவுள்ளனர். இதற்காக விசாரணைக்கு வருமாறு கூறி கலாநிதி மாறனுக்கு போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று அவர் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணையைத் தொடர்ந்து கலாநிதி மாறன் மீதும் வழக்குத் தொடரப்பட்டு அவர் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இன்று கலாநிதி மாறன் சார்பி் அவரது வக்கீல் கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஆஜரானார். பின்னர் ஒரு விண்ணப்பத்தை அவர் வைத்தார்.

அதில், கலாநிதி மாறன் தற்போது வெளியூரில் உள்ளார். ஜூலை 26ம் தேதிதான் ஊர் திரும்புகிறார். எனவே கால அவகாசம் தர வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதுகுறித்து பரிசீலித்த தி.நகர் துணை ஆணையர் அசோக்குமார், கலாநிதி மாறனின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் அளித்துள்ளார்.

English summary
Chennai K.K.Nagar police have called Sun TV MD Kalanidhi Maran to appear for an inquiry. Salem distributor Selvaraj has given a complaint against Sun picutures and its COO Hansraj Saxena for threat and cheating. Saxena has been already arrested. Police have decided to inquire Kalanidhi Maran in this case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X