For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பவர் ஆப் அட்டர்னிக்கான கட்டணம் 10 மடங்காக உயர்த்தப்பட்டது

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: பத்திரப்பதிவு அலுவலகங்களில் பவர் ஆப் அட்டர்னி வழங்கும் ஆவணத்திற்கான கட்டணத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

ஒரு சொத்தின் உரிமையாளர் தனது சொத்தை விற்கவோ அல்லது பராமரிக்கவோ குடும்ப உறுப்பினர் அல்லது வேறு யாருக்காவது உரிமை அளிப்பது தான் பவர் ஆப் அட்டர்னி. இதற்கான கட்டணத்தை தற்போது அரசு உயர்த்தியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது,

இதுவரை குடும்ப உறுப்பினர்களுக்கு பவர் ஆப் அட்டர்னி வழங்குவதற்கு வெறும் ரூ. 100 தான் வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்கு பவர் ஆப் அட்டர்னி வழங்க இதுவரை ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அது இனி ரூ. 10 ஆயிரமாக வசூலிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உரிமை ஆவணங்கள் வைப்பு உடன்படிக்கை ஆவணம் (டெபாசிட் ஆப் டைட்டில்ஸ்) பதிவுக்கான கட்டணம் ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

குத்தகை ஆவணம் (லீஸ்) அதிகபட்ச பதிவுக்கட்டணம் 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

English summary
TN government has increased the fee collected for power of attorney, deposit of titles and lease documents. This new fee structure has come to practice from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X