சங்கரராமன் கொலையில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை- ஜெயேந்திரர்

திங்கள்கிழமை, ஜூலை 18, 2011, 8:38 [IST]
Sankararaman Case Jayendrar Vijayendrar Questionedtoday Aid0091
புதுச்சேரி: சங்கரராமன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர்.

சங்கரராமன் கொலை வழக்கு மிக மிக நிதானமாக, மெதுவாக நடந்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்புதான் சாட்சிகள் விசாரணையும், குறுக்கு விசாரணையும் முடிவடைந்தது.

இனி அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது.

இதற்காக ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் ராமசாமி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி ஜெயேந்திரர், விஜேயந்திரர், அவரது தம்பி ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 24 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர் அவர்களிடம் குறுக்கு விசாரணை தொடங்கியது.

முதலில் ஜெயேந்திரரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மொத்தம் 196 பக்கங்கள் அடங்கிய 554 கேள்விகள் அவரிடம் கொடுத்து விளக்கம் கோரப்பட்டது. அதற்கு அவர் அத்தனை கேள்விகளுக்கும் மறுப்பு தெரிவித்தார். தனக்கும், சங்கரராமன் கொலைக்கும் எந்தத் தொடர்பும், சம்பந்தமும் இல்லை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணைக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு என்ன?

காஞ்சி மடத்திற்குச் சொந்தமான வரதராஜ பெருமாள் கோவிலில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவர் 2004ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கோவில் அலுவலகத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அனைவரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.

இந்த வழக்கில் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுச்சேரி கோர்ட்டில் விசாரணை தொடங்கியது. இதுவரை189 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 81 பேர் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டனர்.

சங்கரராமனின் மனைவி, குழந்தைகள், தலைமை விசாரணை அதிகாரி எஸ்.பி. சக்திவேலு ஆகியோர் விசாரிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.

வழக்கின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், ஜெயேந்திரர் உள்ளிட்ட குற்றவாளிகளிடம் இன்று குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

காஞ்சி சாமியார்கள் புதுச்சேரி கோர்ட்டுக்கு வந்ததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Posted by:
English summary
Jayendrar and Vijayendrar, accused in Kanchi Sankararaman murder case appear before the Puducherry Principal and District sessions Judge Ramasamy today. The court has ordered to file case against all the 24 accused including the seers. So far 189 witnesses have been examined since commencement of the trial here about in April 2009, of whom 81 have turned hostile.
User Comments
Srosaiah Rosaiahs 29 Apr 2012 01:30 pm
நெருப்பு இல்லாமலா புகை வரும் உம்மை கைது செய்த போது உமது மதிப்பும் மரியாதையும் ஊர் சிரித்துவிட்டது இன்னும் உம்மை பெரியவாள் பகவான் என்று துதிபாடும் முட்டாள்களை எண்ணி தலையில்தான் அடித்துக்கொள்ள வேண்டும்.சா.ரோசிய்யா .அரக்கோணம்.
Dravidan dravidan 18 Jul 2011 11:43 pm
அதாவது !! உன்னால் trasty என்ற பெயரில் அமுக்கபார்த்த ஜே வின் கருப்பு பணத்தை சோ ராமசாமியின் மூலம் பேரம் பேசி திருப்பி கொடுக்க சம்மதம் தெரிவித்து விட்டாய் என்று சொல். நன்னா இனி பாலும், பழமும் தின்று பேஷாய் இரு மகனே!! இனி உன் செயலை அம்மா பார்த்துகொள்வார்!!
rakesh kumar 18 Jul 2011 03:42 pm
ஊத்தபல்லன் குடுமி தாயோளியை தூக்கில் போடுவாங்களா?
Govind Rajan 18 Jul 2011 11:57 am
ஊரை ஏமாத்தும் குள்ள நரிக்கூட்டம். மக்களிடம் இருக்கும் ஏமாற்றுதல், குளிபரித்தல், ஏற்ற தாழ்வுகள், கேட்ட எண்ணங்களின் ஆரம்ப இடம் பெரியார் ராமசாமி நாயக்கர் வளர்த்த வீரமணி என்னும் நாயி இருக்கும் பெரியார் திடல்
Seeman Thamizhar 19 Jul 2011 10:43 am
தப்பா சொல்றீங்க. "கன்னட தேவி...பய.. ஆந்தை நரியார்" ன்னு சொல்லணும். அது தான் அவனுக்கு சரியான பேர். அந்த பன்னாட மட்டும் இல்லைன்னா இன்னிக்கு தமிழகம் நாறிப்போன திராவிட கொள்கைகள் இல்லாம நல்லா இருந்திருக்கும்.
Enna Ithu 18 Jul 2011 10:02 am
ஊரை ஏமாத்தும் குள்ள நரிக்கூட்டம். மக்களிடம் இருக்கும் ஏமாற்றுதல், குளிபரித்தல், ஏற்ற தாழ்வுகள், கேட்ட எண்ணங்களின் ஆரம்ப இடம் காஞ்சி சங்கர மடம்.
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST