Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இங்கிலாந்தில் 3 நோயாளிகளை கொன்ற இளம் நர்ஸ் கைது

Posted by:
Published: Friday, July 22, 2011, 17:14 [IST]

Uk Nurse Rebecca Leighton Arrested Murdering 3 Patients Aid0128

லண்டன்: இங்கிலாந்தில் 3 நோயாளிகளைக் கொன்றதற்காக நர்ஸ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து ஸ்டாக்போர்ட்டில் உள்ள ஸ்டெப்பிங் ஹில் என்ற மருத்துவமனையில் நர்ஸாக பணி புரிந்தவர் ரெபெக்கா லீடன்(26). இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிரேசி ஆர்டன்(44), ஜார்ஜ் கீப்(84) , ஆர்னால்ட் லன்காஸ்டர் (71) ஆகிய 3 நோயாளிகள் திடீர் என்று உயிர் இழந்தனர்.

இதையடுத்து அவர்ககள் மரணம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரும் மருத்துவமனையில் குறைந்தது 50 ஊழியர்களிடமாவது விசாரணை நடத்தினர். அப்போது தான் ரெபெக்கா லீடன் சிக்கினார்.

அன்மையில் அவரை நோயாளிகளுக்கு பொறுப்பாக இருப்பதிலிருந்து நீக்கியதால் ரெபெக்கா ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து அந்த 3 நோயாளிகளுக்கு குளுகோஸ் ஏற்றுகையில் இன்சுலினையும் அதனுடன் கலந்துள்ளார். ரெபெக்கா பணிபுரியும் வார்டுக்குப் பக்கத்தில் உள்ள அறையில் இன்சுலின் கலந்த குளுகோஸ் பாட்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து கடந்த 20-ம் தேதி ரெபெக்கா அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
England police have arrested a nurse named Rebecca Leighton(26) for allegedly killing 3 patients by contaminating the saline drips wuth insulin at the Stockport's Stepping Hill Hospital . She did so as she was demoted recently.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST