For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் விரைவில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தொடங்கும்- நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

Google Oneindia Tamil News

Arasu Cable TV
சென்னை: தமிழகத்தில் விரைவில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு முழு அளவில் தொடங்கும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டசபையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அவர் பேசுகையில்,

அரசு கேபிள் டி.வி. ஏற்கெனவே அறிவித்தபடி அரசு கம்பிவட தொலைக்காட்சிக் கழகத்தைப் புத்துயிரூட்ட இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது தஞ்சாவூர், கோயம்புத்தூர், வேலூர், திருநெல்வேலி ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஒளிபரப்பு தலை முனையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

50 கி.மீ. சுற்றெல்லையில் இருக்கும் கம்பிவட இருக்குபவர்கள் அரசு கம்பிவட தொலைக்காட்சி சேவையைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். 16 மாவட்டங்களில் புதிய தலைமுனையங்கள் நிறுவியும், 11 மாவட்டங்களில் தனியார் தலை முனையங்களுடன் ஒப்பந்தம் செய்தும் ஒளிபரப்பு வசதிகளை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்தகைய தலைமுனையங்களிலிருந்து விரைவில் மாநிலம் முழுவதும் ஒளிபரப்பு தொடங்கப்படும் என்றார் அவர்.

English summary
Arasu cable TV transmission will beging very soon, said Finance minister O.Pannerselvam today in TN Assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X