Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பயிர்காப்பீட்டுக்கு பதிவு செய்ததில் முறைகேடு- வி.ஏ.ஓ உள்பட 2 பேர் சஸ்பெண்ட்

Posted by:
Published: Monday, August 8, 2011, 11:00 [IST]

ராமநாதபுரம்: கடந்த தி.மு.க., ஆட்சியில் பயிர் காப்பீட்டுக்கு பயனாளிகளைப் பதிவு செய்ததில் முறைகேடு செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் அருண்ராய் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம் ஏ.புனவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், கடந்த 2009-10ம் ஆண்டில் பயிர் காப்பீடுத் தொகை பெறுவதற்காக பதிவு செய்துள்ள விவசாயிகளிடமிருந்து, ராமநதாபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அருண்ராய் விசாரித்ததில், முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஏ.புனவாசல் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உண்மையான விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைப்பதற்கு ஏதுவாக வருவாய்துறை வேளாண்மைதுறை மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த குழு முன்பாக ஆஜராகி உரிய ஆவணங்களை காட்டி முறைப்படி நிவாரணம் பெறலாம் என்றும் மாவட்ட கலெக்டர் அருண்ராய் தெரிவித்துள்ளார்.

English summary
Ramanathapuram district Collector has suspended a VAO and Agriculture cooperative bank secretary in Fake crop insurancer beneficiaries list case.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter