என் மீதான காங்கிரஸின் ஊழல் புகாரை காங். நிரூபிக்கும் வரை உண்ணாவிரதம்- அன்னா

திங்கள்கிழமை, ஆகஸ்ட் 15, 2011, 12:37 [IST]
Anna Hazare Challenges Congress Prove Aid0091
டெல்லி: என் மீது ஊழல் புகார் கூறியுள்ள காங்கிரஸ் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அதை நிரூபிக்க வேண்டும். அதுவரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நாங்கள் கூறிய லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தாலும் கூட நான் எனது போராட்டத்தை விட மாட்டேன். என் மீதான களங்கத்தை துடைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறியுள்ளார் காந்தியவாதி அன்னா ஹஸாரே.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

வலுவான லோக்பால் மசோதாவைக் கொண்டுவர வேண்டும் என்று போராட்டம் நடத்தும் பிரதிநிதிகள் மீது காங்கிரஸ் கட்சி பொய் குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறது.

இப்போது என் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. நீதிபதி சாவந்த் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் நான் ஊழல் செய்தேன் என்று குறிப்பிடவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி என் மீது சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து விசாரணை நடத்தட்டும்.

ஊழல் செய்ததாக நிரூபித்தால் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். அப்படியில்லை என்றால் நான் குற்றமற்றவன் என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்கும்வரை எனது போராட்டம் தொடரும்.

கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் அமைப்புக்கு நிதி அளித்தவர்களின் விவரங்களை 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடத் தயார். அதேபோல் கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு நிதி அளித்து வருபவர்களின் விவரங்களையும் கட்சியின் செலவுகளையும் வெளியிடத் தயாரா.

ஊழலுக்கு எதிராக எங்கள் அமைப்பு மேற்கொண்டு வரும் போராட்டத்தை கண்டு காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளதால் இது போன்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.

டெல்லியில், செவ்வாய்கிழமை திட்டமிட்டபடி அமைதியான வழியில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும். கூட்டத்தில் தொண்டர்கள் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் யாரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்றார் அவர்.
Posted by:
English summary
Challenging the Congress to prove the allegations of corruption levelled against him, social activist Anna Hazare on Sunday announced that he would continue his indefinite fast until he is either cleared of the charges or an FIR lodged against him. ``I will continue with his proposed fast even if civil society's version of Lokpal bill is cleared in Parliament,’’ he told reporters here soon after the Congress unearthed the 2005 Justice P.B. Sawant Commission report that had found him guilty of misappropriation of funds.
User Comments
குச்சு குச்சு ரக்கம்மா 15 Aug 2011 04:00 pm
இவருக்கு அப்படி என்ன தான் வயிற்றில் கோளாறு என்று நல்ல மருத்துவரை பார்த்து ஆலோசனை பெறுவது நல்லது.. ஆவூன்னா உண்ணாவிரதம் உண்ணாவிரதம்னு இருக்கிறதுல வயிறு சரியாகிவிடாது...அல்லது நல்ல மனநல மருத்துவரை பார்த்து ட்ரீட்மென்ட் எடுக்கவும்..
ICE guy 15 Aug 2011 03:55 pm
சும்மா இருக்குறவர நோண்டுரங்கா, காங்கிரஸ் கட்சியினருக்கு- எதிரிகள் எப்பவுமே உருவாகுறது இல்ல சார், நாம தான் உருவக்குறோம். கணக்கு கேடு இருக்காரு. கொடுக்க ரெடி-ஆ? அவரு 24 மணிநேரத்துல வெளியிடுறாரு. உங்களால 24 வருஷம் அனாலும் முடியாது. அப்படி எழுதுவதில், ராஜீவ் ச்விச்ஸ் பேங்க்-ல போட 1.98 லட்சம் கோடி கணக்குல இருக்காது. எனக்கு என்னமோ நீங்க இவர நோண்டுறத பார்த்தா, நீங்களே உங்களுக்கு பெருசா ஆப்பு வச்சு கிடற மாதிரி இருக்கு. பாருங்க இவரல நீங்க ஆட்சி எழந்து சீரழிஞ்சு திரிய poreenga. கட்சியே காணாம போகுது.
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST