பாரத் ரத்னா விருது வேண்டுமென்றால் சச்சின் ஐபிஎல்லில் ஆடக் கூடாது- ம.பி.முதல்வர்

புதன்கிழமை, ஆகஸ்ட் 17, 2011, 16:53 [IST]
Sachin Should Pick Bharat Ratna Over Ipl Chouhan Aid0091
போபால்: சச்சின் டெண்டுல்கரின் பெயர் பாரத் ரத்னா விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டால், அவர் உடனடியாக ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகி விட வேண்டும். பணம் கொடுத்து விலைக்கு வாங்கி அவரை விளையாட வைப்பது கஷ்டமாக இருக்கிறது. அப்படிப்பட்ட வீரருக்கு பாரத் ரத்னா விருது தரப்படுவது பொருத்தமாக இருக்காது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பாரத் ரத்னா விருதுக்கு சச்சினை பரிசீலிப்பதாக இருந்தால் முதலில் அவர் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை நிறுத்த வேண்டும். இது எனது தாழ்மையான கருத்தாகும்.

சச்சின் போன்ற வீரர்கள் விற்கப்படுவதும்,விலைக்கு வாங்கப்படுவதும் வேதனை தருகிறது. ஒரு வீரர் நாட்டுக்காகத்தான் ஆட வேண்டுமே தவிர கம்பெனிகளுக்காக ஆட் கூடாது. அப்படிப்பட்ட வீரருக்குத்தான் பாரத் ரத்னா விருது கொடுக்கப்படுவது பொருத்தமாக இருக்கும்.

இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் கிரிக்கெட்டின் பெயரைக் கெடுத்து விட்டது இந்த ஐபிஎல். வீரர்களை வர்த்தகப் பொருட்களாக்கி விட்டது. விளையாட்டை நாசமாக்கி விட்டது.

உண்மையில் ஒரு விளையாட்டு வீரருக்குப் பாரத் ரத்னா விருது தருவதாக இருந்தால் முதலில் ஹாக்கி மேதை தியான் சந்த்துக்குத்தான் தர வேண்டும். அவர் இந்திய ஹாக்கியின் உயிர் நாடி ஆவார். இந்திய ஹாக்கிக்குப் பெருமை தேடிக் கொடுத்தவர் அவர். டெண்டுல்கர் மிகச் சரியான,சிறந்த, தகுதியான வீரராக இருந்தாலும் கூட முதலில் தியான் சந்த்துக்குத்தான் அந்த மரியாதையை அரசு செய்ய வேண்டும்.

இந்தியாவிலேயே ஒரு விளையாட்டு வீரருக்கு முதன் முதலில் ஸ்டாம்ப் வெளியிட்டது தியான் சந்துக்குத்தான் என்பது நினைவு கூறத்தக்கது என்றார் செளகான்.

செளகான் சொல்வதை சச்சின் கேட்பாரா?

Posted by:
English summary
Madhya Pradesh Chief Minister, Shivraj Singh Chouhan, has said that master batsman Sachin Tendulkar should not play in the Indian Premier League if his name was under consideration for the country's highest civilian award, Bharat Ratna. "In my view, Sachin Tendulkar should not play in IPL if his name is being considered for Bharat Ratna," he said. "When players like Sachin Tendulkar are sold and bought, it really hurts. A player plays for the country and not for companies," the Chief Minister said here last evening at a function to mark the completion of 75 years of Indian Hockey team's victory in the Berlin Olympics, 1936.
User Comments
elangovan gnanavel 18 Aug 2011 01:33 pm
சச்சின் சிறந்த கிரிக்கெட் வீரர்தான்!ஆனால் கடந்த 8 வருடங்களாகவே,அவர் தனி மனித சாதனைகளுக்காகவே,ஆடி வருகிறார்!இந்தியாவின்,வெற்றி மற்றும் சாதனை ஆட்டங்களில் அவரது பங்களிப்பு குறைவு என்பதே உண்மை.டிராவிட் மட்டுமே,அணிக்காக ஆடும் தலைசிறந்த வீரர்!கிரிக்கெட் என்றால் சச்சினை மட்டுமே முன்னிறுத்துவது ஏன்?
Narathar 17 Aug 2011 07:51 pm
தயான்சந்த் இந்திய இராணுவதில் பணிபுரிந்தவர் , ஒரு முறை ஜெர்மனியில் இந்தியாவின் சார்பில் ஹாக்கி போட்டியில் விளையாடும் போது அவரது ஆட்டத்தை பார்த்து அசந்து போன "ஹிட்லர்" அவரை அழைத்து பாராட்டியதோடு மட்டுமல்லாமல், அவரை ஜெர்மனுக்கு வருமாறும் , வந்தால் அவருக்கு ஜெர்மன் குடிவுரிமையும் மேலும் ஜெர்மன் ராணுவத்தில் "மேஜர் ஜெனரல் " பதவியும் தருவதாகவும் கூறினார். அதை ஏற்க மறுத்த "தயானந்த்" எனது விளையாட்டில் வரும் வேர்வை மட்டுமல்ல எனது கடைசி சொட்டு ரத்தமும் எனது தேசத்திர்ககவே இருக்கும் என்றார் . Hats off!
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs