மனைவியை எரித்துக் கொன்ற ஆயுள் தண்டனை கைதி மீண்டும் கைது

சனிக்கிழமை, செப்டம்பர் 3, 2011, 13:10 [IST]
பணகுடி : ஜாமீனில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி, குடும்ப தகராறில் மனைவியை எரித்து கொலை செய்தார்.

நெல்லை மாவட்டம், பணகுடி அடுத்த காவல்கிணறை சேர்ந்தவர் கிங்ஸ்சன். இவரது மனைவி நாகர்கோவில் கோணத்தை சேர்ந்த மேரி பீமாரோஸ். திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் மற்றும் 1 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

வெல்டிங் வேலை செய்து வந்த கிங்ஸ்சன், அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் சிக்கிய கிங்ஸ்சன் ஆயுள் தண்டனை பெற்று, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் கிங்ஸ்சன் வழக்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஜாமீனில் வந்தார். மீண்டும் கிங்ஸ்சன் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது, ஆத்திரமடைந்த கிங்ஸ்சன், தனது மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த மேரி பீமாரோஸ்சை அருகில் உள்ளோர், அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் பயந்து போன கிங்ஸ்சன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மேரி பீமாரோஸ் இறந்தார். இதுகுறித்து மேரி பீமாரோஸின் தாயார் பத்மா பணகுடி போலீசில் புகார் செய்தார். போலீசார், கிங்கசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Posted by:
English summary
An life imprisonment prisoner was arrested when he was in bail. Kingson, while he was in bail he drunken and put fire on his wife. His wife name Mary was died in hospital.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs