சேலம்: உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேலத்தில், பா.ம.க. தலைவர் ஜி.கே, மணி நிருபர்களிடம் கூறியதாவது, விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் பா.ம.க புதிய உத்வேகத்துடன் போட்டியிட உள்ளது. எங்களது கட்சியுடன் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க விரும்பினோம்.
ஆனால், அதற்கான சாத்திய கூறுகளும், அதற்கு ஏற்ற கட்சிகளும் இங்கு இல்லை. அதனால், நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில், பா.ம.க.தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளத என்றார்அவர்.










