Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

என் இமேஜைக் கெடுத்த குண்டுவெடிப்புகள்: ப.சிதம்பரம்

Posted by:
Published: Friday, September 9, 2011, 17:12 [IST]

3 Terror Attacks After I Took Over Blot On My Image Pc Aid0128

டெல்லி: தான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடந்த 3 வெடிகுண்டுத் தாக்குதல்கள் தனது இமேஜை கெடுத்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில், டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அனுப்பிய 3வது இமெயிலில் அகமதாபாத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இமெயிலை அனுப்பியவர்களை கண்டுபிடித்துவிட்டோம்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை செய்யும் உளவுத்துறையின் செயல்பாடுகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாட்டு மக்களை நாங்கள் நிச்சயம் தீவிரவாதத்தின் பிடியில் இருந்து காப்போம்.

நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 3 வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இவை என் பெயருக்கு ஏற்பட்ட கலங்கம். இதுபோன்று மற்ற அரசுகளின் பெயர்களுக்கும் கூடத் தான் கலங்கம் ஏற்பட்டிருக்கிறது. டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பான உளவுத் துறையின் விசாரணைத் தகவல்களை டெல்லி போலீசுக்கு தெரிவித்துள்ளோம்.

பூனே குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

English summary
Home minister P. Chidambaram has told three terror attacks have happened after he has become home minister. He has called these attacks as blots on his image. He has asked the people to cooperate to fight terrorism.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter