அகமதாபாத்தை தாக்குவோம்: 3-வது மெயிலில் தீவிரவாதிகள் மிரட்டல்

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 9, 2011, 14:33 [IST]
டெல்லி: டெல்லியைத் தொடர்ந்து குஜராத் தலைநகர் அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரடட்டல் வந்துள்ளது. இதையடுத்து அகமதாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று ஹூஜி தீவிரவாத அமைப்பு ஒரு இமெயில் அனுப்பியது. இந்த மெயில் ஜம்மூவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடக்கிறது.

இதையடுத்து நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம் என்று கூறி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு ஒரு இமெயில் அனுப்பியது. இது மேற்கு வங்கத்திலிருந்து வந்தது.

இந்நிலையில் இன்று 3வது இமெயில் வந்துள்ளது. அதில் குஜாராத்தின் முக்கிய நகரான அகமதாபாத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அகமதாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இமெயில் மேல் இமெயில் வந்தாலும் 13 பேர் உயிரை காவு வாங்கிய குண்டுவெடிப்பை யார் நடத்தியது என்று இதுவரை ஒரு துப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் 3-வது இமெயில் வந்தவுடன் அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அனுப்பிய இரண்டாவது இமெயிலில் வரும் 13-ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் முன்பு குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நியூமெரிக்கல் கோட் வடிவத்தில் வந்துள்ள இமெயிலில் அகமதாபாத்தை குறிவைத்திருப்பதாக வந்துள்ளது மக்களை பீதியடைச் செய்துள்ளது.

இதற்கிடையே இரண்டாவது இமெயில் மேற்கு வங்கத்தில் இருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Posted by:
English summary
The National Investigative Agency (NIA) sources have told that a 3rd e-mail have been deciphered today. The e-mail threatens an attack in Ahmedabad. Home ministry has alerted all the states to remain vigilant. In the mean while, the second e-mail has been traced to West Bengal.
User Comments
Jinnnah Syed mubarak 10 Sep 2011 07:30 am
சம்ஜோத ரயிலில் குண்டுவைத்த இந்தியாவின் மிகபெரும் தீவிரவாதிகளையே இன்னும் கைது செய்ய முடியவில்லை..குஜராத் கலவரத்தில் வாக்குமூலம் கொடுத்தவர்களையும் கைது செய்ய முடியவில்லை..எனவே இந்திய அரசாங்கம் ஒரு கையாலாகாத அரசாங்கம் என்பது உண்மைதான்.. இந்திய சட்டத்தின் தராசு ஒரு பக்கம் ஊழலாலும் மறுபக்கம் இவர்களை போன்ற பயங்கரவாதிகளின் படுகொலைகளாலும் சமமாகவே இருகின்றது .. இந்தியாவை ஒரு மத சார்பற்ற சர்வாதிகாரி ஆளும் வரை அதன் தலை எழுத்தை யாராலும் மாற்றி அமைக்க முடியாது..இந்தியாவை காப்பாற்ற இளைய சமுதாயமே விழித்தெழுக..
Jinnnah Syed mubarak 10 Sep 2011 07:20 am
பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே குண்டு வெடிப்புகள் நிற்கும்..அது ஏன் என்று நடுநிலையாளர்களுக்கு புரியும்.. யார் குண்டு வைத்தார்கள் என்பதே இன்னும் தெரியவில்லை..அதற்குள் இந்திய மீடியாக்கள் வழக்கம் போல் முஸ்லிம்களை குறி வைத்து செய்து வெளியிடுவது இந்திய பத்திரிகையின் தர்மம்..இது உலகத்துக்கும் தெரியும்.. முதலில் இந்தியன் முஜாஹித் என்ற அமைப்பு இருகின்றதா என்று ஆராய்ச்சி செய்யுங்கள்..இந்த அமைப்பை தோற்றுவித்ததே இந்திய உள்துறை செயலகமும் சில ஹிந்து தீவிரவாத அமைப்புகளும்தான் என்பது இந்தியர்களுக்கு புரியல
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST