தட தடத்த உலக பங்குச் சந்தைகள்... சென்செக்ஸில் 740 புள்ளிகள் வீழ்ச்சி!

வியாழக்கிழமை, செப்டம்பர் 22, 2011, 15:16 [IST]
Sensex Plunges Over 750 Plus Pts Aid0136
மும்பை: கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவுக்கு இன்று உலக பங்குச் சந்தைகள் உள்ளாகின.

அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகள் அனைத்தின் பங்குச் சந்தைகளும் இன்று வீழ்ச்சி கண்டன.

இந்தியாவின் சென்செக்ஸ் 740 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. பிற்பகல் நிலவரப்படி 744 புள்ளிகளை இழந்து 16318 ஆக இருந்தது சென்செக்ஸ். தேசி பங்குச் சந்தை நிப்டியில் 219 புள்ளிகள் இழந்து 4932.30 ஆக உள்ளது.

உலோகத்துறை பங்குகள்தான் இன்று அதிக வீழ்ச்சிகண்டன. 505 புள்ளிகளுக்கும் மேல் இந்தத் துறை நிறுவனங்கள் இழந்தன. ஆட்டோமொபைல், முதலீட்டுப் பொருள், ரியல் எஸ்டேட், வங்கி, ஐடி என அனைத்துத் துறையிலும் பங்குகள் நஷ்டத்தில் கைமாறின.

சர்வதேச அளவில் சீனா, கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பாவின் டாக்ஸ், எப்டிஎஸ்இ, சிஏசி போன்ற பங்குச் சந்தைகளும் இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.

ஏன் இந்த சரிவு?

அமெரிக்க பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதாக அந்நாட்டு நிதித் துறை அறிவித்துள்ளதன் அதிர்வலைகள் உலகம் முழுவதும் ஏற்படுத்திய மோசமான விளைவுதான் இந்த பங்குச் சந்தை சரிவு என்கிறார்கள் நிபுணர்கள்.
Posted by:
English summary
EW DELHI: The Sensex on Thursday posted its biggest percentage decline in 12 months, mirroring global peers that fell after the Federal Reserve warned the United States faced a grim economic outlook. The 30-share benchmark BSE index was down 4.19 percent to 16361.65 points and the 50-share Nifty was 4.22 percent lower at 4916.50 points.
User Comments
Minnal 22 Sep 2011 04:59 pm
இது ஒரு ஆரம்பம்தான் எங்கு போய் முடியும் ?
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs