மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது

வியாழக்கிழமை, செப்டம்பர் 29, 2011, 9:34 [IST]
டெல்லி: திருமணமாகி 10 மாதங்களில் மனைவியை கொலை செய்து மூட்டையில் சுற்றி ஆற்றில் வீசிய டெல்லியை சேர்ந்த டாக்டரை போலீசார் செய்தனர்.

டெல்லி டி.டியு. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை டாக்டராக இருப்பவர் சந்திர விபாஸ் சாஹூ(31). ஹைதராபாத்தை சேர்ந்த தேவேந்திர பிரசாத் என்பவரது மகள் சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.

சாஹூவிற்கும், சுப்ரியாவிற்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் சுப்ரியாவை டெல்லிக்கு அழைத்து சென்ற சாஹூ, அவரை சில நாட்களில் கொடுமைப்படுத்த தொடங்கினார். சாஹூவின் கொடுமை அதிகரித்ததால், 2 பேரும் பிரிந்தனர். அதன்பின் 2 வீட்டாரும் சேர்ந்து மீண்டும் 2 பேரையும் இணைத்து வைத்தனர்.

அப்போது சுப்ரியாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறி, ஒரு வாரம் மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளார் சாஹூ.

இந்நிலையில் சுப்ரியாவின் உடல் கங்கை ஆற்றில் இருந்து உத்திரபிரதேச போலீசாரால் கைப்பற்றப்பட்டது. சாஹூ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

போலீசார் சாஹூவிடம் நடத்திய விசாரணையில், சுப்ரியாவை அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார். சுப்ரியாவை எப்படியாவது தன்னைவிட்டு பிரிக்க முயன்றார். எந்த முயற்சிகளும் பலிக்காத நிலையில் கடைசியில் அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் மனைவியை அவரது துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்த சாஹூ, உடலை ஒரு பையில் சுற்றி, பீகாருக்கு கொண்டு சென்றார். ஆனால் உறவினர்களுக்கு சந்தேகம் வரலாம் என பயந்த அவர், அலகாபாத் சென்று அங்குள்ள கங்கையாற்றின் பாலம் ஒன்றின் மீதிருந்து உடலை ஆற்றில் ஏறிந்தார்.

சாஹூ உடலை ஏறிந்த இடத்தில் சேற்றில் சிக்கிய உடல் புதைந்தது. ஆற்றில் தண்ணீர் வற்றிய போது, ஹான்டியா என்ற இடத்தில் உடலை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Posted by:
English summary
A Delhi-based doctor has been arrested for allegedly murdering his wife Supriya. He strangulated her and then thrown her body in Ganges near Allahabad.
User Comments
ஆத்துக்குடிம்பி 29 Sep 2011 11:50 am
பரதேசி பய !!!!
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs