For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையில் விஜயகாந்திற்கு கருப்பு கொடி காட்டிய 10 பேர் கைது

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்த போது கருப்பு கொடி காட்டிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தூத்துக்குடி, கோவில்பட்டி பிரசாரத்தை முடித்து விட்டு வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் வண்ணாரப்பேட்டையில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

இதை கேள்விப்பட்டு அங்கு வந்த ஜான் பாண்டியனின், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் கண்மணி மற்றும் சிலர், பரமக்குடி சம்பவம் குறித்து தே.மு.தி.க. அவை தலைவர் பண்ருட்டி ராமசந்திரன் பேசியதை சுட்டிக் காட்டி கறுப்புக்கொடி காட்டினர்.

இதனால் ஆவேசமடைந்த தே.மு.தி.க.வினர் கருப்பு கொடி காட்டியவர்களை தாக்க முயன்றனர். பதிலுக்கு அவர்களும் தாக்க முயன்றனர். இதையடுத்து கருப்புக் கொடி காட்டிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை முன்னிட்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்-க்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

English summary
John Pandian's TMMK cadres shown black flags to DMDMK leader Vijayakanth in Nellai. Police later arrested 15 cadres and evicted from the place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X