For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சரஸ்வதி பூஜை, விஜயதசமியால் பூக்கள் விலை கிடு கிடு

Google Oneindia Tamil News

Jasmine
நெல்லை: சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு தோவாளை பூமார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள முக்கிய பூ மார்க்கெட்டில் தோவாளையும் ஒன்று. இங்கிருந்து பிச்சிப் பூ, மல்லிகை, மரிக்கொழுந்து, அரளி, துளசி, கிரேந்தி, வாடாமல்லி, கோழிக் கொண்டை கனகம்பரம், முல்லை ஆகிய பூக்கள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கம், கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

நவராத்திரி பண்டிகை தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக பூக்களின் விலை சற்று அதிகரித்திருந்தது. இந்நிலையில் நேற்று பூக்களின் விலை மேலும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.100க்கு விற்ற பிச்சிப் பூ தற்போது ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.200க்கு விற்ற மல்லிகைப் பூ ரூ.400 ஆகவும், ரூ.20க்கு விற்ற அரளி ரூ.80 ஆகவும், ரூ.30க்கு விற்ற சம்பங்கி ரூ.100 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

வரும் 5, 6 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி வர உள்ளதால் பூக்கள் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனனர்.

English summary
Flowers prices have been increasing ahead of the festive season in Tamil Nadu. Farmers are happy about the price rise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X