ராஜபக்சேவுக்கு 'தமிழ்நெட்' மூலம் சம்மன் - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சனிக்கிழமை, அக்டோபர் 15, 2011, 16:31 [IST]
Us Court Authorizes Use Tamilnet Serve Rajapakse Aid0136
கொழும்பு: அமெரிக்காவின் கொலம்பியா நீதிமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட சம்மனை ராஜபக்சே தொடர்ந்து வாங்க மறுத்ததால், அதனை தமிழ்நெட் இணையத்தில் வெளியிடமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் மகிந்த ராஜபக்சே மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் போர்க்குற்ற வழக்குகளே. இவற்றின் மீது பிறப்பிக்கப்படும் அழைப்பாணை (சம்மன்) எதையும் ராஜபக்சேவோ இலங்கை அரசோ பெற்றுக் கொள்ளாமல் திருப்பியனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த வழக்குகளுக்கு தமிழர்கள் சார்பில் ஆஜராகும் புரூஸ் பெஃயின் யோசனையின்படி புதிய உத்தரவொன்றை அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோடெல்லி பிறப்பித்துள்ளார்.

டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் என்பவர் ராஜபக்சேவுக்கு எதிராக ஒரு போர்க்குற்ற வழக்கை தொடர்ந்துள்ளார். அவரது உறவினர்களை சர்வதேச போர் விதிகளுக்கு முரணாக ராஜபக்சேயின் உத்தரவுப்படி ராணுவம் கொன்றுவிட்டதாக வழக்கை தொடர்ந்திருந்தார். இவ்வழக்கிற்கு நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் அதனை ஏற்க மகிந்த ராஜபக்சே மறுத்துவிட்டார். எனவே இது தொடர்பான கடிதங்கள் மற்றும் சம்மனை திருப்பி அனுப்பியது அலரி மாளிகை. எனவே இந்த சம்மனை அவருக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

அமெரிக்க சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் குறிப்பிட்ட வழக்கு குறித்து நிச்சயம் அறிந்திருக்கவேண்டும்.

அழைப்பாணையை அனுப்புவதன் மூலமோ இல்லை கடிதம் ஒன்றை அனுப்புவதன் மூலமோ குற்றஞ்சாட்டப்படும் நபர் தனக்கு எதிராக நீதிமன்றில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதை அறியவேண்டும்.

ஆனால் ராஜபக்சே இதனை அறிய மறுப்பதால், இலங்கையில் இருந்து வெளிவரும் 2 பத்திரிகையில் முதல் பக்கத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள சம்மனை முதல்பக்கத்தில் விளம்பரமாக பிரசுரிக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் தமிழ் நெட் இணையத்திலும் பிரசுரிக்கும் வகையில் இந்த உத்தரவு இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உத்தரவை வழங்கியுள்ளது.

இதன்படி ராஜபக்சேவுக்கு எதிரான சம்மனை தமிழ் நெட் இணையமும் இலங்கையில் இருந்து வெளியாகும் 2 பத்திரிகைகளும் பிரசுரித்துள்ளன. இதன் மூலம் ராஜபக்சே மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

எனவே அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் ஆஜராகி அல்லது தன் சார்பில் வழக்கறிஞர் வைத்து அவர் தனது விளக்கத்தைச் சொல்லியாக வேண்டும்.

ஒருவேளை அவர் இதையும் கண்டுகொள்ளாமல் விட்டால் பல பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும்.

உண்மையில் இந்த வழக்கை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவே ராஜபக்சே திட்டமிட்டார். ஆனால் ப்ரூஸ் பெயினின் இந்த புதிய திட்டம் காரணமாக இனி தப்ப முடியாது எனும் அளவுக்கு சிக்கலில் மாட்டியுள்ளார் ராஜபக்சே.
Posted by:
English summary
In a precedent setting order issued by the District Court of District of Columbia Thursday on the case against Sri Lanka's President Rajapakse filed by three Tamil plaintiffs, Judge Kotelly authorized service by "posting the full summons and complaint on the main page of the TamilNet website," and by publication in two Sri Lankan newspapers. Legal sources in Washington said that Rajapakse being haled into a US court to answer charges of complicity in the extra-judicial killings of plaintiffs relatives is imminent.
User Comments
Ponraj Mathialagan 15 Oct 2011 08:39 pm
ஒவ்வொரு விக்கெட்டா விழுது. முதலில் ஜெகத் டயஸின் மீது டென்மார்க்கில் வழக்கு. உடனே 'தப்பிச்சோம் பொழச்சோம்'னு ஓடி வந்துட்டான் அவன். இனி அவன் சாகிற வரைக்கும் ஐரோப்பிய நாட்டுல கால் வைக்க முடியாது. அடுத்து சவெந்திர சில்வா காலி. 'நான் தனியா ஆணி புடுங்குறேன்னு' சோனான்...இப்போ மறைமுகமா அமெரிக்காகிட்ட பிச்சை எடுத்துகிட்டு இருக்கான்... அடுத்து காட்டு மிராண்டிகள் ராஜபக்ஷே பிரதர்ஸ். விரைவில் நல்ல சேதி வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியா இல்லை என்றால் சிங்களனை நாய் தூக்கிட்டு போயிருக்கும்...
Ponraj Mathialagan 15 Oct 2011 08:33 pm
நேற்று மதுரை நீதிமன்றம் இந்திய அரசுக்கு ஒரு ஆணை பிரபித்துள்ளது. அதில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதும், அவர்களுக்கு பாதுகாப்பாக கடலோர காவல் படைகள் துணைக்கு செல்ல வேண்டும் என்பதே. இந்த ஆணையை அடுத்து வரும் 10 நாட்களுக்குள் நடைமுறை படுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிட பட்டுள்ளது. பிசியாக நடுக்கடலில் 'வடை' சுட்டுகொண்டிருக்கும் இந்திய கடலோர காவல் 'வடை'க்கு...சீ...'படை'க்கு இது கெட்ட செய்தி தான். 'வடையை' சிங்களன் பறிச்சுகிட்டு போடுவானே... அப்புறம் 'வட போச்சேன்னு' பொலம்ப வேடியது தான்..
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs