For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வை வரவேற்று தடபுடல் தட்டிகள்; நீதிமன்ற வளாகம் வெள்ளை அடித்து புதுப்பிப்பு!

Google Oneindia Tamil News

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல் முறையாக ஆஜராக வரும் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று ஓசூர் சாலை நெடுகிலும், பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் வரை அதிமுகவினர் சாலையின் இரு மருங்கிலும் தட்டிகளை வைத்து தடபுடலாக வரவற்பு கொடுக்கின்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இதுவரை ஜெயலலிதா ஒருமுறை கூட ஆஜரானதில்லை. தற்போதுதான் முதல் முறையாக அவர் பெங்களூர் வருகிறார். இதையடுத்து ஜெயலலிதாவை வரவேற்று கர்நாடக அதிமுக சார்பில், ஒசூர் ரோட்டிலிருந்து சிறை வளாகம் வரை வரவேற்பு தட்டிகளை வைத்துள்ளனர்.

மேலும் ஏராளமான அதிமுகவினரும் அதிமுக வழக்கறிஞர்களும் தற்காலிக சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் குவிந்துள்ளனர்.

1000 கேள்விகளுடன் காத்திருக்கும் நீதிபதி

இதற்கிடையே, ஜெயலலிதாவிடம் கேட்பதற்காக ஆயிரம் கேள்விகள் வரை நீதிபதி வைத்திருப்பதாகத் தெரிகிறது. இதனால் அவரிடம் விசாரணை ஒரே நாளில் முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

ஜெயலலிதாவின் வருகையை ஒட்டி பரப்பன அக்ரஹாரா சிறை வளாகப் பகுதியில் வெள்ளையடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் பார்க்கும்போது ஏதோ கோர்ட் திறப்பு விழாவுக்கு ஒரு முதலமைச்சர் வருவது போல காட்சி தெரிகிறது. சாதாரண வழக்கு விசாரணைக்கு வரும் ஒரு முதல்வருக்கு ஏன் இந்த தடபுடல் வரவேற்பு என்று தெரியாமல் கர்நாடக மக்கள் இதையெல்லாம் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

English summary
ADMK cadres have put up welcome boards to Chief Minister Jayalalitha, who is coming to Bangalore spl court to appear before the judge in assets case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X