For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் சாப்ட்வேர் ஆன் வீல்ஸ் கண்காட்சி

Google Oneindia Tamil News

பெங்களூர்: சென்னை, பெங்களூர், ஹைதராபாத் நகரங்களில் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கான கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இந்தியாவில் எண்ணற்ற கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. கம்ப்யூட்டரை இயக்க தேவையான பல நுணுக்கமான மென்பொருட்களை தயாரித்து வரும் அந்த நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை வெளி உலகிற்கு கொண்டு வர தகுந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த குறையை போக்கு வகையி்லும், மென் பொருள் வியாபாரத்தை பெருக்கும் வகையில் நாட்டின் பல இடங்களில் மென்பொருள் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

'சாப்ட்வேட் ஆன் வீல்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த கண்காட்சியின் மூலம் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் பெரியளவிலான விளம்பரத்தை பெற்று கொள்ள முடியும். மேலும் தங்கள் பொருட்களில் உள்ள நுகர்வோரின் எதிர்பார்ப்பையும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த கண்காட்சியில் நுகர்வோர்- விற்பனையாளர், நுகர்வோர்-நுகர்வோர் இடையிலான வியாபாரம் நடைபெறும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள முக்கிய இடங்களிலும், ஐ.டி. நிறுவனங்கள் அதிகமுள்ள இடங்களிலும் இந்த கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த கண்காட்சி மூலம் சிறிது முதல் பெரிய அளவிலான மென்பொருள் தேவைகளை பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும்.

தற்போது சென்னை மற்றும் ஹைராபாத் நகரங்களில் நடக்க உள்ள நிகழ்ச்சிகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஹைதராத்தில் நடக்க உள்ள நிகழ்ச்சிக்கான முன்பதிவு முடிவடைந்துவி்ட்டது. வரும் 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் நடக்க உள்ள சென்னை நிகழ்ச்சிக்கான முன்பதிவு மட்டும் நடந்து வருகிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக, மும்பையில் கண்காட்சி நடத்தப்படும். நாட்டின் பல இடங்களில் நடத்தப்படும் எல்லா 'சாப்ட்வேட் ஆன் வீல்ஸ்' நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க, மொத்தமாக முன்பதிவு செய்யும் முறையும் உள்ளது.

English summary
Indian Software Product Market is planing to contact a Software On Wheels, is a new and innovative way for software vendors to reach market where they get a chance to exhibit their products to a larger audience at larger spectrum and paves way for both B2C and B2B products allowing participation of companies of any size with any budget. The programmes will be conducted in various cities like Bangalore, Chennai, Mumbai to name a few, Software On Wheels road shows are also held at various prime locations where both IT and non IT companies can come together to develop an open market space for each and every software.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X