மும்பை: தீபாவளியையொட்டி நேற்று நடந்த மும்பை பங்குச் சந்தையில் நடந்த சிறப்பு முகூர்த்த வர்த்தகத்தில், பங்குச் சந்தை பெரிய அளவில் ஏற்றத்தையும் காணவில்லை, இறக்கத்தையும் காணவில்லை.
பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் காலையில் 70 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஆனால், மாலையில் அது குறைந்து 34 புள்ளிகளுடன் முடிவடைந்தது. இதன்மூலம் நேற்று சென்செக்ஸ் 17275.37 ஆக முடிவடைந்தது. அதே போல தேசிய பங்குச் சந்தையான நிப்டி 5,202 புள்ளிகளாக இருந்தது.
கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று சென்செக்ஸ் 21,005 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரே ஆண்டில் அதன் மதிப்பு 18 சதவீதம் சரிந்துவிட்டது.