For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவில் செல்போன் பயன்படுத்துவோர் 95 கோடி!!

By Shankar
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் மொத்தம் 95 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர்.

உலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவில் அதன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இது குறித்து சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி இந்த செப்டம்பர் மாதம்வரை சீனாவில் 95 கோடியே 23 லட்சத்து 10 ஆயிரம் பேர் செல்போன் உபயோகிக்கின்றனர். இவர்களில் 1 கோடியே 22 லட்சத்து 20 ஆயிரம் பேர் புதிதாக செல்போன் பயன்படுத்துபவர்கள்.

இவர்களில் 3ஜி செல்போன்களை பயன்படுத்துவோர் மட்டும் 1 கோடியே 2 லட்சத்து 46 ஆயிரம் பேர்.

இந்த தகவலை தொழில் மற்றும் தகவல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செல்போன் தவிர அகன்ற அலைவரிசை இண்டர்நெட் இணைப்பை 1 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரம் பேர் பயன்படுத்துகின்றனர்.

ஆண்டு தோறும் 23 லட்சத்து 64 ஆயிரம் பேர் கூடுதலாக இண்டர்நெட் இணைப்பு பெறுகின்றனர் என அந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

English summary
A recent survey revealed that the total number of mobile phone users in China is about 95 cr till last September 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X