இந்தியாவுக்கு வரும் மேற்கிந்திய தீவுகள் அணியில் கெய்ல் இல்லை

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 1, 2011, 15:15 [IST]
West Indies Team Tour India Sans Gayle Aid0180
செயின்ட் ஜான்ஸ்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் அதிரடி வீரர் கிரிஸ் கெய்ல் இல்லை.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இந்திய அணியுடன் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. 2 அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 6ம் தேதி டெல்லியில் துவங்க உள்ளது.

இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ள அதிரடி வீரர் கிரிஸ் கெய்ல் பெயர் இடம்பெறவில்லை. தற்போது வங்க தேசத்தில் விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணியில் காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்ட ஏட்ரியன் பரத் குணமடைந்துள்ளார். எனவே இந்தியா உடனான டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

காயம் காரணமாக லென்ட்ல் சிம்மன்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் இளம் வீரர்களான கிரெய்க் பிராத்வெய்டே, கிய்ரன் பவல் ஆகியோருடன் களமிறங்க மேற்கிந்திய தீவுகள் அணி தீர்மானித்துள்ளது.

இந்தியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி விவரம்:

டாரன் சம்மி (கேப்டன்), அட்ரியன் பரத், கார்ல்டன் பாக், தேவேந்திர பிஷு, கிரெய்க் பிராத்வெய்டே, டாரன் பிராவோ, ஷிவ்நரைன் சந்தர்பால், பிடல் எட்வர்ட்ஸ், கிர்க் எட்வர்ட்ஸ், கியரன் பவல், திணேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), ரவி ராம்பால், கெமர் ரோச், மார்லன் சாமுவல்ஸ், ஷேன் ஷில்லிங்போர்ட்.
Posted by:
English summary
West Indies selectors have rejected Chris Gayle this time also. So, West Indies team is going to tour in India without Gayle. The team includes Darren Sammy (c), Adrian Barath, Carlton Baugh, Devendra Bishoo, Kraigg Brathwaite, Darren Bravo, Shivnarine Chanderpaul, Fidel Edwards, Kirk Edwards, Kieran Powell, Denesh Ramdin (wk), Ravi Rampaul, Kemar Roach, Marlon Samuels, Shane Shillingford.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs