For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நைஜீரியாவில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள்: 150 பேர் பலி

Google Oneindia Tamil News

அபுஜா: நைஜீரியாவில் பல இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

நைஜீரியா நாட்டின் வடபகுதிகளான தாமட்ரூ, மய்டூகுரி ஆகிய இடங்களில் நேற்று காலையில் பல இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்தன. தேவாலயங்கள், போலீஸ் நிலையங்கள் என பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன.

இதன்பின் பல இடங்களில் துப்பாக்கி சூடும் நடந்தது. இதில் 150க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அல்-குவைதாவுடன் தொடர்புடைய போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளது.

இதுகுறித்து போகோ ஹராம் விடுத்துள்ள மிரட்டலில் நைஜீரியாவில் பல இடங்களில் நடந்த தாக்குதல் சம்பவங்களுக்கு நாங்கள் தான் காரணம். கூட்டுப் படைகளின் மூலம் எங்களை தாக்குவது நிறுத்தும் வரை, இதுபோன்ற தாக்குதல்களை தொடருவோம், என்று கூறியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு நைஜீரியா அதிபர் குட்லக் ஜோனதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

English summary
At least 150 people have died in a "heinous" wave of gun and bomb attacks in northern Nigeria that were today claimed by the Islamist Boko Haram sect.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X