பத்திரிகைகளுக்கு பயப்படமாட்டேன் - சொல்லீட்டாரு 'அஞ்சா நெஞ்சன்' ராஜபக்சே!!

புதன்கிழமை, நவம்பர் 9, 2011, 17:09 [IST]
Rajapaksa Spits Venom Against Newspapers Aid0136
கொழும்பு: பத்திரிகைகளுக்கு நான் பயப்பட மாட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செவிலியருக்கான படிப்பை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார்.

பல்வேறு விதமான பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். அவ்வாறு பயந்துகொண்டிருந்தால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கையில் ஏராளமான குப்பை பத்திரிகைகள் வெளியாகின்றன என்று அவர் கூறினார்.

பொதுமக்கள் பத்திரிகைகளில் வரும் செய்திகளை அப்படியே நம்பிவிடாமல் அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வது அவசியம் என்றார் அவர்.

இலங்கையில் சமீப காலமாக பல பத்திரிகைகளை ராஜபக்சே அரசு தடை செய்துவிட்டது. பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துவதில் உலகிலேயே முன்னணியில் உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று.

அரசை எதிர்த்து எழுதியதற்காக சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்கே கொடூரமாக கொல்லப்பட்டதில் ராஜபக்சே மற்றும் அவரது தம்பி கோத்தபாயவுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.

புலிகளை ஆதரித்ததாகக் கூறி திசநாயகம் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களை ராஜபக்சே அரசு துன்புறுத்தியது.

இரு தினங்களுக்கு முன்பும்கூட 5 செய்தி இணையதளங்களை மூட உத்தரவிட்டது ராஜபக்சே அரசு என்பது நினைவிருக்கலாம்.

Posted by:
English summary
Sri Lankan president Rajapaksa told that he never afraid for newspapers or anti govt news.
User Comments
Raasappu Sinnathambi 14 Nov 2011 08:12 pm
மாலைதீவுலையும் அஞ்சா நெஞ்சன கோட்டவுட்டுடாங்க
Raman Sundaramoothy 10 Nov 2011 02:25 am
உலகத்தின் நான்காவது பெரிய ராணுவத்தை வெற்றி கொண்டவர்கள்தான்; ஸ்ரீலங்கா ராணுவத்தை வெல்ல முடியாது, வன்னி மக்களை பணயமாக வைத்து, மேற்குலகுடன் பேரம்பேசினார்கள். தோற்றுவிட்டு; ஐ நா, அமெரிக்கா, போர்க்குற்றம், விசாரணை, என்று....
pasupathi subbian 09 Nov 2011 10:07 pm
அமெரிக்காவின் பாணியில் விடுதலை புலி வேட்டை என்ற பெயரில் பொதுமக்களை வேட்டை ஆடி , ஐ நா வின் பார்வையை அமெரிக்காவின் உதவியுடன் மறைத்து நாடகம்மாடிவரும் இவர் ஒரு போர் குற்றவாளி நிச்சயம் . இதற்க்கு இவர் பதில் சொல்லியே ஆகவேண்டும்
Raasappu Sinnathambi 09 Nov 2011 06:13 pm
அமெரிகாவுல ஐக்கிய நாடுகள் தொடருல பான்கி மூனவச்சு மடக்கி அவுஸ்திரேலியால காமன்வெல்த் மகாநாட்டுல பிரிடிஷ் குவீன வச்சு மடக்கி இப்போ மாலதீவுல சார்க் மகாநாட்டுல ரொபேட் பிளேக்க வச்சு மடக்க போராங்களாம் ரிவில பத்திரிகைகளில சொல்லுராங்க
சோனியா புருஷன் 09 Nov 2011 06:48 pm
ராசப்பு சின்னதம்பி மல்லி,கோத்தா உங்களுக்கு எவ்ளோ கொடுக்கினம்? எனக்கு இங்கட அம்சா வெறும் நூறு டாலர் தருவினம். உங்களுக்கு ஒரு நாளைக்கு 1000 சிலோன் ரூபாய் என்று கேள்விப்பட்டன். உங்களை 'சிங்கள எதிர்ப்பு' கட்டுரைக்கு மட்டும் எதிர் கமெண்ட்டு போட அசைன்மெண்டு என்று கேள்விப் பட்டன். உண்மை தான் மல்லி. நன்றாக எழுதினம். பட்டையை கிளப்புறீர் போங்கோ.இந்த வாரம் பெய்மேன்ட்டு வந்துட்டதா?
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs