சென்னை: தங்கத்தின் விலையில் இன்றும் தொடர் உயர்வு காணப்பட்டது. இன்று மட்டும் ரூ 264 உயர்ந்தது சவரனுக்கு.
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்ததன் காரணமாக கடந்த மாதம் தங்கம் விலை குறைந்தது. ஒரு சவரன் ரூ.22 ஆயிரத்தை கடந்து விற்ற தங்கம் ரூ.19 ஆயிரமாக குறைந்தது.
இந்த நிலையில், குறைந்த வேகத்தில் மீண்டும் விலை உயர்ந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 640 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.264 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 904 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2738-க்கு விற்கிறது.
தற்போது தங்கம் மீண்டும் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொடும் நிலையில் உள்ளது. தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலரின் விலை வீழ்ச்சி காரணம் என கூறப்படுகிறது.
திருமண சீசன் தொடங்கிவிட்டதால் தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்துவிட்டது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.57 ஆயிரத்து 150 ஆக இருந்தது. இன்று கிலோவுக்கு ரூ.1,035 அதிகரித்து ரூ.58 ஆயிரத்து 185 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.62.25 ஆக உள்ளது.