For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிங்ஃபிஷர் நிறுவன பங்குகளை வாங்கும் திட்டமில்லை - ரிலையனஸ் முடிவு?

By Shankar
Google Oneindia Tamil News

Mukesh Ambani
மும்பை: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளியான செய்திக்கு ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கிங்பிஷர் நிறுவனம் ரூ 9000 கோடி கடன் பிரச்னையில் தத்தளித்து வருகிறது. வங்கிகளிடம் கூடுதல் கடன் கேட்டு வருகிறது. ஆனால் வங்கிகள் இப்படி கடன் தரக்கூடாது என பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால் கடந்த வாரம் அதன் பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியமும் தாமதமாகத் தரப்படுகிறது.

இந்நிலையில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக்கொள்ள ரிலையன்ஸ் நிறுவனம் விரும்புவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இன்று அந்த தகவல்களை மறுத்துவிட்டது ரிலையன்ஸ் நிறுவனம்.

English summary
A spokesman for Reliance Industries denied on Wednesday a newspaper report the Indian energy major was in talks to buy a stake in cash-strapped Kingfisher Airlines.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X