கள்ளக்காதல்: மனைவி, மகள் கழுத்தை அறுத்த ஆசிரியர் தற்கொலை முயற்சி

திங்கள்கிழமை, நவம்பர் 21, 2011, 13:45 [IST]
மதுரை: மனைவிக்கு கள்ளத் தொடர்பு உள்ளது என்று சந்தேகித்த பள்ளி ஆசிரியர் தனது மனைவி, மகளின் கழுத்தை அறுத்து தனது கழுத்தையும் அறுத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை டெட்டாணிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அவரது மனைவி சகாயம். அவர்களுக்கு ஒரு மகள் உண்டு. இந்நிலையில் தனது மனைவிக்கு யாருடனோ கள்ளத்தொடர்பு உள்ளது என்றும், அதற்கு தனது மகளே உடந்தை என்றும் செல்வராஜுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து அவர் இன்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்தார். பின்னர் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார். அவரது மனைவி, மகளின் கதறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே கரிமோடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய 3 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Posted by:
English summary
A private school teacher Selvaraj has slit his throat after slitting his wife and daughter's throats. He has done so as he suspects that his wife is having an extra marital affair.
User Comments
mubarak kuwait 21 Nov 2011 04:58 pm
அம்மா கள்ள உறவுக்கு மகளே துணை போகிறாளா என்ன கொடும சார் இது?
sdfsdf 21 Nov 2011 04:31 pm
dfssxvcbcb
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs