For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'டேம் 999' படத்தை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்- கருணாநிதி கோரிக்கை

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: டேம் 999 என்ற திரைப்படத்தால் தமிழகம், கேரளா ஆகிய இரு மாநில மக்களிடையே நிலவி வரும் இணக்கமான சூழல் கெடும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும். எனவே நாடு முழுவதும் இந்தப் படம் தடை செய்யப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சினை உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் உள்நோக்கத்துடன் சிலர் திட்டமிட்டு டேம் 999 என்ற படத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப் படம் திரையிடப்பட்டால், தமிழகம், கேரள மாநில மக்களுக்கிடையே நிலவும் இணக்கமான சூழல் மாறி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

எனவே இந்தப் படத்தை நாடு முழுவதும் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசும் இந்தப் படத்திற்கு தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK chief Karunanidhi has urged the centre to ban DAM 999 movie all over India. He said, this movie has ulterior motive. Miscreants want to destabilize the cordial relations between the people of TN and Kerala. So centre should not allow the screening of this movie, he urged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X