For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக சிந்தனையாளர்கள் பட்டியலில் அன்னா ஹசாரே, ஆசிம்பிரேம்ஜி பெயர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Anna Hazare and Azim Premji
வாஷிங்டன்: உலகின் உள்ள மிகச்சிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் விப்ரோ நிறுவனதலைவர் ஆசிம் பிரேம்ஜி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உள்ளிட்ட 5 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும், உள்நாட்டு புரட்சி, வறுமை ஒழிப்பு, சமூக போராட்டம் போன்றவற்றில் அளப்பரிய பங்கு கொண்டு சிறந்து விளங்கிய 100 சிந்தனையாளர்களை 'வெளிநாட்டு கொள்கை இதழ்" பட்டியலிட்டுள்ளது.

அரபு நாடுகளில் ஏற்பட்ட புரட்சிக்கு வித்திட்டவர்களே இந்த பட்டியலில் முதல் 9 இடங்களை பிடித்துள்ளனர். மென்பொருள் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்சும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில் அமெரிக்க அதிபர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு இந்த பட்டியலில் 11 வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 'பில்கேட்ஸ்'

அதில், சாப்ட்வேர் துறையில் சிறந்த பங்காற்றியதுடன் சமூக தொண்டில் கால்பதித்துள்ள இந்தியாவின் பில்கேட்ஸ் என்று அழைக்கப்படும் ஆசிம் பிரேம்ஜிக்கு 14வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிராக அறவழியில் போராடும் அன்னா ஹசாரே 37வது இடத்தையும் பிடித்துள்ளார். எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அருந்ததிராய், வறுமை ஒழிப்பு ஆய்வாளர் தீபா நாராயணன், பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியர்கள் ஆவர்.

English summary
Software czar Azim Premji and anti-corruption activist Anna Hazare are among five Indians who figure in the Foreign Policy magazine's list of Top 100 Global Thinkers, that is dominated by revolutionaries who have been the driving force behind the Arab Spring.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X