Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஸ்டர் நிறுவன துணை இயக்குநர்

Posted by:
Published: Thursday, December 1, 2011, 12:37 [IST]

உதகை: உதகை பாஸ்டர் நிறுவனத்தின் துணை இயக்குநராக பணியாற்றி வந்த டாக்டர் கே.ஆர்.மணி பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பாமகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு நெருக்கமாக இருந்தவர் டாக்டர் கே.ஆர்.மணி. அன்புமணி அமைச்சராக இருந்த போது இமாச்சலப் பிரதேசம் காசோலியில் உள்ள பாஸ்டர் நிறுவனத்தில் இருந்த கே.ஆர்.மணி உதகை பாஸ்டர் நிறுவனத்தின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

கே.ஆர்.மணி நேற்று (நவம்பர் 30) பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக இருந்தது. இதனையடுத்து உதகை பாஸ்டர் நிறுவனத்தில் அவருக்கு பிரிவு உபச்சார விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திடீரென டாக்டர் கே.ஆர்.மணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஓய்வு பெறும் நாளில் துணை இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பாஸ்டர் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Coonoor Pasteur institute deputy director K.R.Mani has got suspended on the day of his retirement. This incident has left the employees in shock.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
CSK Vs MI - Qualifier 1 at Feroz Shah Kotla Tue 21st May IPL
RR Vs SUN - Eliminator at Feroz Shah Kotla Wed 22nd May IPL
IRE Vs PAK - 1st ODI at Castle Avenue Thu 23rd May ODI