கள்ளக்காதல்: கணவனை கொன்ற பெண், கள்ளக்காதலன், சகோதரியுடன் கைது

வியாழக்கிழமை, டிசம்பர் 8, 2011, 17:01 [IST]
சென்னை: கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி, அவரது கள்ளக்காதலன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ராயப்பன் (42). இவரது மனைவி மீனாட்சி (34). காதல் திருமணம் செய்த இந்த தம்பதியருக்கு அம்மு (12), அப்பு (13) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, மீனாட்சியின் நடத்தையில் சந்தேகமடைநத ராயப்பன் அவருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் கணவன், மனைவி 2 பேரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்தனர்.

மாங்காட்டை அடுத்த எம்.ஜி.ஆர் தெருவில் உள்ள வாடகை வீட்டில் மீனாட்சி குழந்தைகளோடு வசித்து வந்தார். அந்த வீ்ட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் திணறிய மீனாட்சி, வீட்டின் ஒரு பகுதியில் வினேஷ் (19) என்பவரை தங்க வைத்தார். வினேஷ் தனது தாயாருடன் அங்கு தங்கினார். வீட்டு வாடகையை வினேஷும், மீனாட்சியும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, மீனாட்சியின் வீட்டிற்கு வந்த ராயப்பன், அங்கு விக்னேஷ் தங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆத்திரமடைந்த ராயப்பன், விக்னேஷை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டார். இது குறித்து மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் திருவேற்காடு வெங்கடேஸ்வரா நகரில் உள்ள மீனாட்சியின் சகோதரி விஜயாவின் வீட்டில் ராயப்பன் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போரூர் உதவி கமிஷனர் அய்யப்பன், இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், 6 பேர் கொண்ட கும்பல் ராயப்பனை துரத்தி வந்ததாகவும், அவர்களிடம் வாங்கிய கடனை கேட்டு கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் விஜயா தெரிவித்தார். விஜயா மீது சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது, விஜயாவும், மீனாட்சியும் சேர்ந்து ராயப்பனை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.

இது குறித்து விஜயா, மீனாட்சி உள்ளிட்டோர் போலீஸ் விசாரணையில் கூறியதாவது,

ராயப்பனை பிரிந்து தனியாக வாழ்ந்த மீனாட்சி, கோயம்பேட்டில் தக்காளி வியாபாரம் செய்து வந்தார். அப்போது லட்சுமணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. அதனை அறிந்த ராயப்பன், கள்ளத்தொடர்பை விட்டு விடுமாறு மீனாட்சியை வற்புறுத்தி உள்ளார். ஆனால் கள்ளத்தொடர்பை விட முடியாமல் தவித்த மீனாட்சி, ராயப்பனை கொலை செய்த தீர்மானித்தார்.

சம்பவத்தன்று விஜயாவின் வீட்டிற்கு குடிபோதையில் ராயப்பன் வந்திருந்தார். அதனை அறிந்த மீனாட்சி, லட்சுமணன் உடன் விஜயாவின் வீட்டிற்கு வந்தார். அதன்பிறகு போதையில் தூங்கிக் கொண்டிருந்த ராயப்பனின் தலையில் உருட்டுக்கட்டையால் லட்சுமணன், விஜயா, மீனாட்சி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து தாக்கினர். இதில் படுகாயமடைந்த ராயப்பனின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர், என்றனர்.

ராயப்பனை கொலை செய்த மீனாட்சி, விஜயா, லட்சுமணன் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Posted by:
English summary
42 year person Raiappan was killed by his wife Meenakshi. Police arrested Meenakshi, her sister vijaya, Meenakshi's paramour Lakshmanan.
User Comments
Raj 09 Dec 2011 02:42 am
வாரத்துக்கு ரண்டு கள்ளகாதல் நியூஸ் போடாட்டி, எடிடருக்கு தூக்கம் வாராது போல.... இருந்தாலும் தமிழனை கவர இதெல்லாம் தேவை தான்... என்ன பண்ணறது... ஆனாலும், திராவிட வரலாறு போன்றவை அருமையான முயற்சிகள்... பாராட்டுகிறோம்...
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs