To check Oneindia Tamil on your Mobile
go to:   http://m.oneindia.in/tamil/

உல்லாசத்திற்கு வர மறுத்ததால் கள்ளக்காதலியை உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரன்!

திருவண்ணாமலை: உல்லாசமாக இருக்க கள்ளக்காதலி வர மறுத்ததால் அவரை அப்பெண்ணின் கள்ளக்காதலன் உயிரோடு தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் திருவண்ணாமலை அருகே நடந்துள்ளது.

திருவண்ணாமலை அருகே உள்ளது நாராயணமங்கலம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை. 45 வயதான இவரது கணவர் 15 ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டார். அஞ்சலைக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

அஞ்சலைக்கும், காசி என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் தனது மகளின் 3 பவுன் நகையை காசி எடுத்து விற்று விட்டதை அறிந்தார் அஞ்சலை. இதனால் காசி மீது கடும் கோபம் கொண்டார்.

இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் அஞ்சலையின் மகன் விஜயக்குமார் சபரிமலைக்கு மாலை போட்டு போயுள்ளார். இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த காசி, அஞ்சலையை உல்லாசமாக இருக்கக் கூப்பிட்டுள்ளார். ஆனால் மகன் மலைக்குப் போயிருக்கும் நேரத்தில் இது கூடாது என்று அஞ்சலை மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்தார் காசி. இதையடுத்து வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து அஞ்சலை மீது ஊற்றி தீவைத்து விட்டார். தீக்காயம் பட்டு துடித்த அஞ்சலையை அக்கம் பக்கத்தில் இருந்தோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தன்னை காசிதான் தீவைத்துக் கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்தார் அஞ்சலை. இதையடுத்து கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீஸார் காசியைக் கைது செய்தனர்.

இந்த நிலையில் தற்போது அஞ்சலை இறந்து விட்டார். இதையடுத்து அவரது வாக்குமூலத்தை மரண வாக்குமூலமாக மாற்றி காசி மீதான வழக்கையும் கொலை வழக்காக போலீஸார் மாற்றியுள்ளனர்.
English summary
45 year old Woman was burnt alive by her paramour near Tiruvannamali. She was dead after admitted in the hospital. Her paramour has been arrested.
டிசம்பர் 9, 2011 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 
    Upcoming Matches
Aus Vs Sl at Bellerive Oval Fri 24th Feb ODI
Ken Vs Ire Fri 24th Feb Int2020
Nz Vs Sa - 1st ODI at Westpac Stadium Sat 25th Feb ODI

மனைவி-குழந்தையை அபகரித்துக் கொண்டார் 'உயர்திரு 420' சினேகன்!- எஞ்ஜினீயர் புகார்

சென்னை: தன் மனைவி மற்றும் குழந்தையை அபகரித்துக் கொண்டார் என பிரபல பாடல் ஆசிரியரும், நடிகருமான சினேகன் மீது என்ஜினீயர் ஒருவர் பரபரப்பான புகார் கொடுத்துள்ளார்.

சென்னை மடிப்பாக்கம், சக்தி நகர், எழில் அவென்யூவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 34). என்ஜினீயரான இவர், தனியாக கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் ஜமுனா கலாதேவி (27).

இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரபாகரன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு கொடுத்தார்......

கள்ளக்காதல்: மனைவி, மகள் கழுத்தை அறுத்த ஆசிரியர் தற்கொலை முயற்சி

மதுரை: மனைவிக்கு கள்ளத் தொடர்பு உள்ளது என்று சந்தேகித்த பள்ளி ஆசிரியர் தனது மனைவி, மகளின் கழுத்தை அறுத்து தனது கழுத்தையும் அறுத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை டெட்டாணிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அவரது மனைவி சகாயம். அவர்களுக்கு ஒரு மகள் உண்டு. இந்நிலையில் தனது மனைவிக்கு யாருடனோ கள்ளத்தொடர்பு உள்ளது என்றும், அதற்கு தனது மகளே உடந்தை என்றும் செல்வராஜுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து அவர் இன்று காலை வீட்டில் தூங்கிக்.....
User Comments
dvujikvjk 09 Dec 2011 10:00 pm
மகன் மகள் என்ன செய்தார்கள்
First Namenatarajan Balakrishnan 09 Dec 2011 04:17 pm
அடப்பாவி தீயை எங்கே வைத்தான் ?
[ கருத்தை எழுதுங்கள் ]
Oneindia  Oneindia Login