For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈராக்கில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுமையாக விடைப் பெற்றது

Google Oneindia Tamil News

நாசிராய்: ஈராக்கில் பாதுக்காப்பு பணியில் இருந்த அமெரிக்கப் படைகள் படிப்படியாக திரும்ப அமெரிக்காவிற்கு அழைத்து கொள்ளப்பட்டு வந்தது. நேற்று ஈராக்கில் இருந்த கடைசிப் ராணுவக் குழுவும் பிரிவு உபசரணை நிகழ்ச்சியுடன் ஈராக்கில் இருந்து விடைபெற்றது.

ஈராக்கில் சர்வாதிகாரியாக ஆட்சி செய்து வந்த சதாம் உசேனை வீழ்த்தும் திட்டத்துடன், கடந்த 2003ம் ஆண்டு 1,70,000 அமெரிக்க படைவீரர்கள் களமிறங்கினர். நீண்ட தேடுலுக்கு பிறகு சதாம் உசேனை கைது செய்து தூக்கிலிடப்பட்டார்.

இதனை அறிந்த சதாமின் ஆதரவாளர்கள் ஈராக்கில் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே குண்டுவெடிப்புகளும், வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. இதனை தடுக்கும் பொருட்டு, அமெரிக்க படைகள் ஈராக்கில் தொடர்ந்து பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் படிப்படியாக அமெரிக்காவிற்கு திரும்ப அழைத்து கொள்ளப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார்.

அதனையடுத்து ஈராக்கில் இருந்த அமெரிக்க ராணுவம் படிப்படியாக நாடு திரும்பி வந்தனர். இறுதியாக நாசிரியாவில் 4,000 மட்டுமே அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் சார்பாக பிரிவு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க கர்னல் ரிச்சார்ட் கைசர், ஈராக் அதிகாரி ஹூசைன் அல் அசாதி உள்ளி்ட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஹூசைன் அல் அசாதி கூறியதாவது,

ஈராக்கில் உள்ள கடைசி ராணுவக் குழு இன்று விடை பெறுவதாக ஈராக் மக்களுக்கு அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். இன்று எங்கள் பணியின் கடைசி பக்கத்தை திருப்புகிறோம். ஈராக்கில் உள்ள கடைசி ராணுவப் படைக்கு பொறுப்பாளராக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன், என்றார்.

English summary
Iraq took control of the last American military base in the country, a day after US forces marked the end of their mission, bringing a divisive war to a low-key conclusion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X