For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீடுகளை லாட்ஜாக மாற்றும் குடும்ப பெண்கள்: கலாச்சார சீரழிவை நோக்கி சென்னை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குடும்ப பெண்கள் பலர், வீடுகளை விபச்சார விடுதிகளாக பயன்படுத்தி பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெண்கள் பலரும் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய கலாச்சார சீரழிவில் ஈடுபடுவதால் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.

பணத்திற்கு ஆசை ஆடம்பர வாழ்க்கை

சிக்கனமாக இருக்கச் சொல்லும் கணவரின் பேச்சைக் கேட்காமல், அக்கம் பக்கத்தவர்களைப் பார்த்து தாமும் அதைப்போல செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டு வாழ்க்கையை பலி கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வருகிறது. ஆடம்பர வாழ்க்கை, கைகளில் கரன்சி, விதவிதமான உடைகள், கூடவே உல்லாசம் என சைத்தான்கள் ஓதும் வேதத்தை கேட்டு படுகுழியில் விழுகின்றனர் குடும்பப் பெண்கள்.

வாழ்க்கை பறிபோகும்

பணத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைப்பதோடு உயிரை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது. இதற்கு உதாரணமே சென்னை எம்.ஜி.ஆர் நகர். ஆவடி திருமுல்லை வாயலில் நடைபெற்ற பெண்களின் கொலைகள். இந்த இரண்டு கொலைகளுமே கணவர், குழந்தைகளோடு குடும்பம் நடத்தும் பெண்கள் சறுக்கியதாலேயே உயிரிழந்துள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்டு தனது வீட்டை விபசார விடுதியாக மாற்றியதே திருமுல்லைவாயில் யாஸ்மினுக்கு எமனாக மாறிவிட்டது.

போலீஸ் அதிரடி நடவடிக்கை

இந்த இரண்டு கொலைகளுக்குப் பின்னர் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடந்த இரண்டு நாட்களாக குடும்பப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துபவர்களை கைது செய்து வருகின்றனர்.

பெரம்பூர் ஜமாலியா எஸ்.பி.ஓ.ஏ. காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மீனா என்ற 37 வயது பெண், ஆன்லைன் மூலம் குடும்ப பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து மாறு வேடத்தில் வாடிக்கையாளர் போல சென்ற விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் மீனாவையும் அங்கிருந்த இரண்டு குடும்பப் பெண்களையும் கைது செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்களை போலீசார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டை உல்லாச விடுதியாக்கினார்

மீனா கேரளாவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பாபு ஆந்திராக்காரர். மாதம் ரூ.20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு குடியிருந்து வரும் மீனா, இதுபோன்று குடும்ப பெண்களை வரவழைத்து வீட்டை உல்லாச விடுதியாக மாற்றியதும் தெரிய வந்தது. இதற்காக தான் வாடகைக்கு இருந்த வீட்டை உள்வாடகைக்கு விட்டு அவர் பணம் சம்பாதித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல அசோக் பில்லர் அருகே விபச்சாரம் செய்த தனம் என்ற பெண் கைது செய்யப்பட்டார். ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆயுர்வேதிக் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் செய்வதாக விளம்பரம் செய்து, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கேரளாவைச் சேர்ந்த திலீப், சபின் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 3 அழகிகள் மீட்கப்பட்டனர்.

கலாச்சார சீரழிவு

சென்னையில், வீட்டில் வைத்து விபசாரத்தில் ஈடுபடுவது நூதன கலாச்சாரமாக மாறியுள்ளது. எனவே அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள், பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது. யார்-யார் வந்து செல்கிறார்கள் என்பதையும் ஓரளவுக்கு கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இண்டர்நெட் மூலமாக இளைஞர்களை கவர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும், பங்களாக்களிலும் விபசாரத்தில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மற்றும் குடும்ப பெண்கள் தங்களது குடும்பத்தினருக்கு தெரிந்தும், தெரியாமலும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகின்றனர்.இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி எச்சரித்துள்ளார். மேலும், இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

English summary
The anti-vice squad on Sunday arrested four people, including two women, for running prostitution rackets. Police sent a young constable to a house in Perambur where they suspected that 37-year-old Meena was running a prostitution racket. "She had a website to attract customers. Once they registered online, she would call them to a house in Perambur," police said. The cyber cell has now shut down the website.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X