For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Facebook and Twitter
டெல்லி: பேஸ்புக், யுடியூப், உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ள ஆட்சேபத்திற்குரிய பதிவுகளை நீக்க கோரி 21 இணையதளங்களுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து ஜனவரி 13 ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேஸ்புக், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட பல புகழ் பெற்ற இணையத்தளங்களில் ஏராளமான தகவல் பரிமாற்றங்கள் நடக்கின்றன. ஆனால் இந்த இணையத் தளங்களில் இடையிடையே ஆபாச பதிவுகளும் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே குறிப்பிட்ட 21 இணையத்தளங்களை தடை செய்யவேண்டும் என்று டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுதேஷ்குமார், பேஸ்புக், மைக்ரோ சாப்ட், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட 21 இணையத் தளங்களில் உள்ள ஆட்சேபத்துக்குரிய பதிவுகள் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விளக்கம் அளிக்க தவறினால் இந்த 21 இணையத்தளங்களும் சட்டப்பிரிவு 292, 293 மற்றும் 120-பி ஆகிய பிரிவுகளில் வழக்கை எதிர் கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறினார்.

மேலும் மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஜனவரி 13-ந்தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி சுதேஷ்குமார் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
The Delhi High Court has issued summons to owners of 21 social networking sites, including Microsoft, Facebook, Google, Yahoo and YouTube. The summons have been issued by Metropolitan Magistrate Sudesh Kumar for allegedly webcasting objectionable content on their websites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X