For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ருஷ்டியை இந்தியாவுக்குள் விடக்கூடாது: முஸ்லிம் அமைப்பு பிரதமருக்கு கடிதம்

By Siva
Google Oneindia Tamil News

லக்னோ: பிரபல ஆங்கில எழுத்தாளரான சல்மான் ருஷ்டி ஜெயப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார். ஆனால் அவரது விசாவை ரத்து செய்யுமாறு இஸ்லாமிய மத அமைப்பான தாரூல் உலூம் தியோபான்ட் அமைப்பு, பிரதமர் மற்றும் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

பிரபல பிரிட்டிஷ் இந்திய எழுத்தாளரான சல்மான ருஷ்டி வரும் 20 முதல் 24ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்நிலையில் முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காத ருஷ்டியின் விசாவை ரத்து செய்யுமாறு இஸ்லாமிய மத அமைப்பான தாரூல் உலூம் தியோபான்ட் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

பிரமரும், சோனியாவும் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாருல் உலூம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அதன் தலைவர் மௌலானா முப்தி அபுல் காசிம் நொமானி தெரிவித்துள்ளார்.

கடந்த 1998ம் ஆண்டு வெளிவந்த ருஷ்டியின் சேட்டனிக் வெர்சஸ் என்ற நூல் மூலம் முஸ்லிம்களின் மத உணர்வை அவமதித்ததற்காக அவருக்கு எதிராக பத்வா கொடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2000ம் ஆண்டு அவர் பலத்த பாதுகாப்புடன் இந்தியாவுக்கு வந்து சென்றார். கடந்த 2007ம் ஆண்டு முஸ்லிம்களின் எதிர்ப்பையும் மீறி அவர் ஜெயப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் வரும் 20ம் தேதி துவங்கும் இலக்கிய விழாவிலும் குறிப்பிட்டபடி அவர் கலந்துகொள்வார் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களை மனதில் வைத்து அரசியல் கட்சிகள் ருஷ்டி விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ராஷீத் மசூத் கூறுகையில், முஸ்லிம்கள் ருஷ்டியை மன்னிக்கக் கூடாது. உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கவிருக்கும்போது அவரது வருகை பிரச்சனையைக் கிளப்பும். அதனால் ஜெய்ப்பூர் விழாவை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

பாஜக துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், தேர்தல் நேரத்தில் ருஷ்டி வருவது சரியல்ல. அவருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விசா வழங்குவது உகந்ததன்று என்றார். ருஷ்டி வருகையை தடை செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகமது ஹசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் இந்தியாவுக்கு வர விசா தேவையில்லை என்று ருஷ்டி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
The Darul-Uloom Deoband’s chief Maulana Mufti Abul Qasim Nomani had written letters to PM Manmohan Singh and congress president Sonia Gandhi to cancel the visa of British-Indian writer Salman Rushdie. He is going to attend January 20-24 Jaiput literature festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X